இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய பும்ராவுக்கு சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இரண்டு அணிகளும் ஏறக்குறைய சமமான ஸ்கோர் எடுத்திருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்துக்கு நுழைந்திருக்கிறது.
பும்ராவுக்கு விடப்பட்ட வாய்ப்புகள்
இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த பென் டக்கட், ஒல்லி போப் மற்றும் ஹாரி புரூக் மூவருக்குமே பும்ரா எளிய கேட்ச் வாய்ப்புகளை உருவாக்கினார். ஆனால் இந்திய பீல்டர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ரவீந்திர ஜடேஜா இதை வீணடித்தார்கள். இதன் காரணமாக இந்திய அணிக்கு சமமான ஸ்கோரை இங்கிலாந்து எடுத்தது.
மேலும் நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் பந்து வீசிய பும்ரா ஹாரி புரூக் வைக்கட்டை கைப்பற்றினார். ஆனால் அந்தப் பந்து நோபால் ஆக அமைந்துவிட்டது. பல வகைகளில் பும்ரா அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்தார். அப்படி இருந்தபொழுதும் அவர் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
சச்சின் வாழ்த்து
மேலும் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக 5 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையை பும்ரா படைத்திருக்கிறார். மேலும் வெளிநாட்டு மண்ணில் பன்னிரண்டாவது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி கபில்தேவ் சாதனையையும் இந்திய பந்துவீச்சாளராக சமன் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : சர்துல் வேணாம்.. பந்தை என்கிட்ட கொடு.. பும்ரா 20 நிமிடத்தை தள்ளி வைத்து மாஸ் சம்பவம் – என்ன நடந்தது?
பும்ராவுக்கு சச்சின் தெரிவித்த வாழ்த்தில் “வாழ்த்துக்கள் பும்ரா! உங்களுக்கும் ஒன்பது விக்கெட்டுகளுக்கும் இடையில் மூன்று கேட்ச் வாய்ப்புகள் மற்றும் ஒரு நோபால் இருந்துவிட்டது. சிறப்பாக பந்து வீசினீர்கள்” என்று தவற விடப்பட்ட வாய்ப்புகளையும் சேர்த்து கூறி வாழ்த்தி இருக்கிறார்.






