தம்பி சர்பராஸ் உன்னோட முதல் சதமே மாஸ்.. என்ன மாதிரியான ஒரு சந்தர்ப்பம் – சச்சின் மனம் திறந்த பாராட்டு

0
342
Sachin

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா மற்றும் இந்தியாவின் சர்பராஸ் கான் இருவருக்கும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

ரச்சின் ரவீந்தராவுக்கு பெங்களூர் சொந்த நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மைதானத்தில் அவருக்கு இது இரண்டாவது சதமாகவும் அமைந்தது. சர்பராஸ் கானுக்கு முதல் சர்வதேச சதகமாக இது அமைந்திருக்கிறது. மேலும் சச்சினை போலவே அவரும் மும்பை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிறப்பு வாய்ந்த 2 சதங்கள்

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு முதல் இன்னிங்ஸில் ரச்சின் ரவீந்தரா 157 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார். மைதானத்தில் ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரச்சின் ரவீந்தரா சதம் அடித்திருந்தார். மேலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர் இந்திய அணிக்கு எதிராக சொந்த நகரத்தின் மைதானத்தில் சதம் அடித்தது சிறப்பானதாக அமைந்திருக்கிறது.

அதே சமயத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் ரன்கள் குவித்து இந்திய அணிக்குள் வந்த சர்பராஸ் கானுக்கு முதல் சர்வதேச சதமாக இது இருக்கிறது. மேலும் மும்பை பேட்ஸ்மேன்களுக்கு உரிய பிடிவாதம் மற்றும் அக்ரஷன் உடன் மிக முக்கியமான நேரத்தில் சதத்தை எடுத்துக் கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

என்ன மாதிரியான சந்தர்ப்பம் சர்ப்ராஸ் கான்!

சதம் அடித்த இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் கூறும் பொழுது ” நமது வேர்களுடன் நம்மை இணைப்பதற்கு எப்பொழுதும் கிரிக்கெட் ஒரு வழியாகஇருக்கிறது. ரச்சின் ரவீந்தரா குடும்பத்திற்கு பெங்களூர் நகரத்துடன் சிறப்பு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அவரது பெயரில் இன்னும் ஒரு சதம் சேர்ந்திருக்கிறது”

இதையும் படிங்க : ஆஸி தொடர்.. ருத்ராஜ் கேப்டன்சியில் இசான் கிசான் மற்றும் 2 தமிழக வீரர்கள்.. இந்திய ஏ அணி பற்றிய தகவல்

“சர்பராஸ் கான் நீங்கள் இந்தியாவிற்கு தேவைப்படும் பொழுது உங்களுடைய சதத்தை அடித்திருக்கிறீர்கள். இது என்ன மாதிரியான ஒரு அருமையான சந்தர்ப்பம்!” இன்று மனம் திறந்து பாராட்டி பதிவு செய்திருக்கிறார். தற்பொழுது சர்பராஸ் கான் தொடர்ந்து களத்தில் நின்று ரிஷப் பண்ட் உடன் விளையாடி வருகிறார்.

- Advertisement -