இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் அடுத்ததாக நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் இளம் வீரரான இசான் கிஷான் மீண்டும் இந்திய தேசிய ஏ அணிக்கு தேர்வாக உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசான் கிசானுக்கு மீண்டும் வாய்ப்பு
இந்திய கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட கட்சித் தொடரில் விளையாட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்திய ஏ அணி நான்கு நாட்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. இதில் உள்நாட்டில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறுவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக விளையாடிய இசான் கிஷான் தற்போது மீண்டும் இந்த தொடரில் இடம் பிடித்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். இஷான் கிஷான் உள்நாட்டுத் தொடர்களில் விளையாட மறுத்ததால் அவரை பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்து நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு ஜார்கண்டணியில் கேப்டனாக இடம் பிடித்து உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடினார். இந்தியா ஏ அணியில் விளையாடும் நிலையில் மீண்டும் சீனியர் வீரர்கள் கொண்ட அணியில் இடம் பிடிக்க இசான் கிசானுக்கு மீண்டும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது
இரண்டு தமிழக வீரர்கள்
இந்த இரண்டு நான்கு நாட்கள் கொண்ட போட்டி தொடர் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் மூன்றாம் தேதி வரை முதல் போட்டியும் ஏழாம் தேதி முதல் 10ம் தேதி வரை இரண்டாவது போட்டியும் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கு ருத்ராஜ் கெயிகுவாட் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அணியில் தமிழக வீரர்கள் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க:ஜெய்ஸ்வால் நீங்க ஒரு கச்சா பேட்ஸ்மேன்தான்.. 2வது முறை இப்படி பண்ணியிருக்கக் கூடாது – பாக் பசித் அலி விமர்சனம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ள இந்தியா ஏ மாதிரி அணி :ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன், பிஇந்திரஜித், அபிஷேக் போரல் இஷான் கிஷன், முகேஷ் குமார், ரிக்கி புய், நிதிஷ் குமார் ரெட்டி, மானவ் சுதர், நவ்தீப் சைனி, கலீல் அகமது, தனுஷ்.