சச்சின் பாண்டிங் காலிஸ் தோனி ரெக்கார்ட் காலி.. ரோகித் சர்மா புதிய சாதனை.. ஆசிய கோப்பையில் அமர்க்களம்!

0
765
Rohit

தற்பொழுது 16ஆவது ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்றில் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதி வருகின்றன.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து மூன்றாவது நாளாக களம் இறங்கும் இந்திய அணிக்கு முதலில் பேட்டிங் செய்வது நல்ல விஷயமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் இன்றைய கொழும்பு பிரேமதாசா ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கக் கூடியது. இந்த காரணத்தினால் மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு, சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று இலங்கைக்கு எதிராக விளையாடும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணி நேராக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகின்ற மிக அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இந்த காரணத்தினால் இந்திய அணி தனது வலிமையான பிளேயிங் லெவனுடன் களம் இறங்கி இருக்கிறது.

மேலும் இந்த காரணத்தினால் பேட்டியில் களம் இறங்கிய இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் நிலைமைகளுக்கு மதிப்பளித்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ரோகித் சர்மா இன்று தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை எட்டி முக்கிய மைல்கல்லை தொட்டு இருக்கிறார். இதன் மூலம் அவர் சில முக்கியமான சாதனைகளையும் படைத்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் பத்தாயிரம் ரன்களை எட்டிய வீரர்களில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். இதில் இந்திய நட்சத்திரம் சச்சின் மற்றும் வெளிநாட்டு நட்சத்திரங்கள் பாண்டிங், காலிஸ் ஆகியோரது சாதனைகளை உடைத்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்க்களில் பத்தாயிரம் ரன்கள் எடுத்த வீரர்கள் :

விராட் கோலி – 205
ரோஹித் சர்மா – 241
சச்சின் டெண்டுல்கர் – 259
சவுரவ் கங்குலி – 263
ரிக்கி பாண்டிங் – 266
ஜாக் காலிஸ் – 272
எம் எஸ் தோனி – 271