சச்சின் லாரா விராட் கோலி சாதனையை உடைத்து பாபர் ஆஸம் உலகச் சாதனை – டாப் 10 லிஸ்ட்!

0
448
Babar

சில நாட்களுக்கு முன் இருந்து பங்களாதேஷ் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் விளையாடும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது!

இந்த முத்தரப்பு தொடரில் இன்று நடந்த போட்டியில் பங்களாதேஷ் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு துவக்க வீரர்களாக வந்த நஜ்முல் ஷான்டோ மற்றும் சௌம்யா சர்க்கார் இருவரும் உடனே வெளியேறினார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தார்கள்.

லிட்டன் தாஸ் 42 பந்துகளில் 69 ரன்களை 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷகிப் அல் ஹசன் 42 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வழக்கம்போல் முஹம்மது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் இருவரும் நங்கூரமிட்டு நின்று விளையாட ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 12.3 ஓவர்களில் 101 ரன்கள் சேர்த்தார்கள். கேப்டன் பாபர் 40 பந்துகளில் 55 ரன்களை 9 பவுண்டரிகளுடன் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 100வது அரைசதம் ஆகும். இந்த அறை சதத்தின் மூலம் பாபர் குறைந்த இன்னிங்சில் அதிவேகமாக 100 சர்வதேச அரை சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலகச் சாதனையை படைத்தார்.

- Advertisement -

இதையடுத்து 3-வது விக்கெட்டாக முகமது ரிஸ்வான் வெற்றிக்கு 7 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், 56 பந்துகளில் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முடிவில் பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. முகமது நவாஸ் 20 பந்துகளில் 45 ரன்களை 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் விளாசி இறுதிவரை களத்தில் நின்றார்.

குறைந்த இன்னிங்ஸ்களில் அதிவேகமாக 100 சர்வதேச அரை சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்:

251 -பாபர் ஆஸம்
256- விவியன் ரிச்சர்ட்ஸ்
271- ஜோ ரூட்
275- விராட் கோலி
275 -ஹசிம் ஆம்லா
295-பிரைன் லாரா
296 -சச்சின் டெண்டுல்கர்
296 -கேன் வில்லியம்சன்
298 -ஸ்டீவ் வாக்
298-ஜாவித் மியான்தத்