“2011 WC-ல் சச்சின் ஒரு ஐடியா கொடுத்தார்.. இப்ப இந்திய அணிக்கு ரொம்ப அவசியமா இருக்கும்!” – யுவராஜ் சிங் வெளியிட்ட சூப்பர் அட்வைஸ்!

0
448
Yuvraj

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் எப்பொழுதும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்!

அப்பொழுது நடைபெற்ற அந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இப்போது போல் இல்லாமல் காலிறுதி ஆட்டங்களும் இருந்தன. ஒரு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் 3 நாக் அவுட் போட்டிகளில் விளையாட வேண்டும்.

- Advertisement -

தற்போது உலகக்கோப்பை நடத்தப்படும் முறையில் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வென்றால் உலகக்கோப்பை கிடைத்துவிடும். ஆனால் முன்பு நடைபெற்ற முறை கொஞ்சம் கடினமான ஒன்று.

இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அந்த உலகக்கோப்பையில் மிகவும் வலுவான நிலைமையில் இருந்து சரிந்து தோற்றது. இங்கிலாந்துக்கு எதிராக பெரிய ரன்கள் அடித்து இறுதியாக கடினப்பட்டு போட்டியை டை செய்தது. அந்த நேரத்தில் லீக் சுற்றில் இந்திய அணி மீது நிறைய விமர்சனங்கள் வெளியில் வந்தன.

ஆனால் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு காலிறுதியில் ஆஸ்திரேலியா, அரை இறுதியில் பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இலங்கை என மூன்று நாக்அவுட் போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து இந்தியா அணிக்கு ஆலோசனை கூறியுள்ள யுவராஜ் சிங் கூறும் பொழுது “இப்பொழுது கவனச்சிதறல் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் எங்கள் காலத்தில் சமூக ஊடகங்கள் பெரிய அளவில் இல்லை. அதே சமயத்தில் தொலைக்காட்சி மற்றும் மக்கள் என எங்களுக்கும் கவனச்சிதறல் இருந்தது. நாங்கள் அதிலிருந்து விலகி விளையாட்டில் கவனம் செலுத்த முயன்றோம்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நாங்கள் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தோம். இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டும். அந்த நேரத்தில் ஊடகங்கள் வெறி பிடிக்க ஆரம்பித்தன.

அந்த நேரத்தில் சச்சின் அணியுடன் அமர்ந்து ‘வீரர்கள் செய்தித்தாள்கள் படிப்பது மற்றும் தொலைக்காட்சியை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் விமான நிலையங்களில் மக்கள் நெரிசலாக இருக்கும் இடங்களில் ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும. நாம் உலகக் கோப்பையை மட்டும் கவனிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். நாங்கள் அதைப் பின்பற்றினோம். அது மிக நன்றாக வேலை செய்தது.

ஏனென்றால் எப்படியும் அதிகப்படியான அழுத்தம் இருக்க செய்யும். இந்திய அணிக்கு பிரச்சனை என்னவென்றால் இந்தியா மட்டுமே வெல்லும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். இது ஒரு பெரிய உலகக் கோப்பை தொடர். இங்கு பல நல்ல அணிகள் உள்ளன. நீங்கள் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு மற்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!