கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இந்திய அணிக்கு குவியும் பாராட்டுக்கள்.. சச்சின் முதல் புஜாரா வரை வாழ்த்து.. சிராஜை ஒரே வார்த்தையால் புகழ்ந்த சச்சின்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்து போராடி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. யாருமே எதிர்பாராத வகையில் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர் சிராஜ் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 85 ஓவர்கள் வீசிய இந்திய அணி 367 ரன்களில் இங்கிலாந்து அணியை சுருட்டியது. இந்த வெற்றிக்கு பின்னால் இந்திய அணியின் கூட்டு முயற்சியும் கடும் உழைப்பும் காரணமாக இருப்பதாக பல முன்னாள் வீரர்கள் பாராட்டியுள்ளனர்.

சிராஜ்க்கு சச்சின் பாராட்டு:

இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்தியுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முகமது சிராஜை இந்தியாவின் சூப்பர் மேன் என்று புகழ்ந்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின், இந்தியாவின் இந்த வெற்றி எனக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது. தொடர் வேண்டுமானால் இரண்டுக்கு இரண்டு என்று முடிந்து இருக்கலாம்.

ஆனால் இந்திய அணி வீரர்களின் செயல்பாட்டுக்கு பத்துக்கு பத்து என்ற மதிப்பெண் தான் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியை சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ள புஜாரா, வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இது. நம்பிக்கையும் இந்திய வீரர்களின் திறனும் வெளிக்காட்டும் வெற்றியாக இது அமைந்திருக்கின்றது.

- Advertisement -

குவியும் வாழ்த்துகள்:

டெஸ்ட் கிரிக்கெட் போல் வேறு எதுவும் வராது. சிறப்பு வாய்ந்த தொடருக்கு நல்ல முடிவு கிடைத்திருக்கிறது என்று பாராட்டியுள்ளார். இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே, சிறப்பான வெற்றி இது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நெருக்கடியான சூழ்நிலையில் சிராஜும், பிரசித் கிருஷ்ணாவும் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்று பாராட்டியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன், சிராஜ் கிருஷ்ணாவும் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார்கள். இது இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றிகளில் ஒன்று. இந்திய வீரர்களுக்கு என்னுடைய அன்பும் வாழ்த்துக்களும் என்று  கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எங்கள் வீரர்கள் யாரும் அழுது கொண்டே தூங்க போவது கிடையாது.. ஒரு விஷயத்துக்கு பெருமைதான் – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

இதேபோன்று விராட் கோலி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய அணியில் சிறந்த வெற்றி இது. கடினமான உத்வேகத்திற்கு கிடைத்த வெற்றி இது .சிராஜ் மற்றும் பிரசித்தி கிருஷ்ணா அணியை சிறப்பான ஒரு வெற்றிக்கு வழி நடத்தி இருக்கிறார்கள். முகமது சிராஜ் அணிக்காக அனைத்தையும் தியாகம் செய்து விளையாடி இருக்கின்றார். அவருக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -
Published by