இந்திய கிரிக்கெட்டில் கடினமான ஒரு விஷயத்தை இஷான் கிஷான் செய்திருப்பதாக இந்திய முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சபா கரீம் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஸ்டாக் அலி தொடரில் அதிக ரன்கள் குவித்தவராக இஷான் கிஷான் இருந்தார். மேலும் அவர் ஜார்கண்ட் அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கி கோப்பையையும் வென்றார். இதனால் அவருக்கு டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது.
இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் கில்லை நீக்குவது என இந்திய தேர்வுக்குழு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை நிரந்தர தொடக்க ஆட்டக்காரராக கொண்டுவர முடிவும் செய்தது.
இந்தியத் தேர்வுக்குழு இந்த முடிவுக்கு வந்ததுமே, மாற்று தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கொண்டுவர வேண்டும் என புத்திசாலித்தனமாக முடிவு செய்தார்கள். ஏனென்றால் தொடக்க இடத்தில் எந்த மாறுதலையும் செய்ய அவர்கள் விரும்பவில்லை. இந்திய பேட்டிங் ஆர்டர் ஒரேவகையில் வரவேண்டும் என இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து சபா கரீம் கூடும் பொழுது “இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்து இந்திய அணிக்குள் வருவது என்பது சாதாரணம் கிடையாது. ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டில் நிறைய போட்டிகள் இருக்கிறது. மீண்டும் திரும்ப வருவதற்கு ஏராளமான ரன்கள் எடுக்க வேண்டும் என இஷான் கிஷான் உணர்ந்து இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் சிறப்பான முறையில் விளையாட ரன்கள் குவித்து மீண்டும் வந்திருக்கிறார்”
இதையும் படிங்க : ஒரே படகில் கில் மூழ்க சூரியகுமார் கரையேறிட்டார்.. இனி இது வேற மாதிரி இருக்கும் – இர்பான் பதான் கருத்து
” நடந்து முடிந்த சையத் முஸ்டாக் அலி தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் அவர் தனது ஜார்க்கண்ட் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதைப் பாராட்டி அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் தன்னை மறந்து இருந்தார். தற்போது அவர் தனது திறமையை உணர்ந்து விளையாடி மீண்டும் திரும்பி வந்து விட்டார்” என்று பாராட்டி இருக்கிறார்.