உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தென்னாப்பிரிக்க அணி தற்போது நடப்பு சாம்பியனாக புதிய டெஸ்ட் போட்டியில் ஒன்றில் பங்கேற்றுள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது.
இந்த சூழலில் தற்போது தென்னாப்பிரிக்க அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பாப்வேவுக்கு சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. எனினும் இந்த தொடர் புதிய உலக டெஸ்ட் சைக்கிளில் இடம்பெறாது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பங்கேற்ற பல வீரர்கள் இந்த போட்டியில் விளையாடவில்லை.
பைனலில் விளையாடிய நான்கு வீரர்கள் மட்டும்தான் இந்த தொடரில் இடம் பிடித்திருக்கிறார்கள். குறிப்பாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா காயம் காரணமாக விலகிய நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கேசவ் மகராஜ் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இந்த தொடரில் செயல்படுகிறார்.
இதேபோன்று இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் பிரவீஸ் பவுலிங் ஆல் ரவுண்டர் கோடி யூசுப், லுஹான் டி பிரிட்டோரியஸ் போன்ற வீரர்கள் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் அறிமுகமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
எனினும் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் முதலில் பந்து வீசுவதில் தமக்கு சந்தோஷம்தான் என ஜிம்பாப்வே கேப்டன் கிரைக் எர்வின் அறிவித்தார். அதற்கு தகுந்தார் போல் ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தடுமாறினர்.
இதையும் படிங்க: கம்பீர் இனி எந்த சாக்குப் போக்கும் சொல்ல முடியாது.. அகர்கர் கிட்ட சிக்க போறார் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் டோனி டிஸோர்சி 16 பந்துகளை எதிர் கொண்டு டக்அவுட் ஆனார். அதேபோன்று மேத்தீவ் பிரீட்ஸ்கே 13 ரன்களில் வெளியேற வியான் முல்டர் 17 ரன்கள் எடுத்தார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் பெட்டிங்கம் டக்அவுட் ஆக தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.அறிமுக வீரராக களமிறங்கிய லுகான் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார். 31 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 116 எடுத்திருக்கிறது.