கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

SA 20.. 207 ரன்.. 20 ஓவர்.. பொல்லார்ட் 221 ஸ்டிரைக் ரேட்.. மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி போராடி தோல்வி

தென் ஆப்பிரிக்காவில் தற்போது சவுத் ஆப்பிரிக்கா டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கேப்டவுன் மற்றும் டர்பன் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டர்பன் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

- Advertisement -

இதன்படி முதலில் பேட்டிங் களம் இறங்கிய கேப்டவுன் அணிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வாண்டர் டசன் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 24 குவித்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் ஆறு பவுண்டரி, ஆறு சிக்ஸர் விளாசி 87 ரன்கள் குவித்தார். அடுத்த இரண்டு விக்கெட்டுகளை கேப்டவுன் அணி விரைவாக இழந்த போதிலும், லிவிங்ஸ்டண் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் கணக்கை அதிரடியாக உயர்த்தினர்.

லிவிங்ஸ்டண் 20 பந்துகளில் மூன்று சிக்சர்கள் அடித்து 25 ரன்கள் குவித்தார். அந்த அணியின் கேப்டன் பொல்லார்டு 14 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உடன் 220 ஸ்ட்ரைக் ரேட்டில் 31 ரன்கள் விளாசினார். இறுதியில் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. டர்பன் அணித்தரப்பில் கீமோ பால் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

க்ளீசன், மகாராஜ் மற்றும் பிரிட்டோரியஸ் ஆகியோர் ஒரு விக்கட்டைக் கைப்பற்றினார். பின்னர் டர்பன் அணி 208 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கியது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் ஐந்து ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ப்ரீக் அதிரடியாக விளையாடி 39 ரன்கள் குவித்தார். மல்டர் மற்றும் கீமோ போல் ஆகியோர் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும் கிளாசன் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

35 பந்துகளில் நாலு பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 85 ரன்கள் குவித்தார். பூரன் தனது பங்குக்கு 11 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். ஆட்டத்தின் 16.3 வது ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தொடங்குவதற்கு தாமதமான நிலையில் டிஎல்எஸ் விதிப்படி டர்பன் அணி 16 ஓவர்களில் 166 ரன்கள் கடந்திருக்க வேண்டும். அப்போது டர்பன் அணியின் ஸ்கோர் 171 ஆக இருந்தது.

இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 85 ரன்கள் விலாசிய அந்த அணியின் கிளாசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கேப்டவுன் அணி 207 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியாமல் போனது.

- Advertisement -
Published by

Recent Posts