சூப்பர் கிங்ஸில் மும்பை இந்தியன்ஸ் கோட்ஸி.. 2024 முழு வீரர்கள் பட்டியல்!

0
185

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ் ஏ 20 தொடரில் சிஎஸ்கே அணி ஜோகனஸ்பர்கை மையமாக வைத்து ஒரு அணியை வாங்கி இருக்கிறது. இதேபோன்று மும்பை, ராஜஸ்தான்,சன்ரைசர்ஸ், டெல்லி, லக்னோ போன்ற அணிகளும் எஸ் எ 20 தொடரில் ஒவ்வொரு நகரை மையமாக வைத்து அணிகளை வாங்கி இருக்கிறது.

இதனால் இந்த தொடர் மீது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த முறை ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டுப்ளிசிஸ் செயல்பட்டார். ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக பிளமிங் தான் விளங்கினார்.

- Advertisement -

ஜேஎஸ்கே விளையாடிய 9 போட்டிகளில் ஆறு வெற்றி,மூன்று தோல்வி என புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றது. எனினும் அரையிறுதியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியுடன் தோல்வியை தழுவியது. கடந்த சீசனில் ஜே எஸ் கே கேப்டன் டுபிளசிஸ் ஒரு சதம், இரண்டு அரை சதம் என 369 ரன்கள் குவித்தார்.

தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோயிட்சே ஜே எஸ் கே அணியில் 17 விக்கெட் கைப்பற்றி அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.இந்த நிலையில் வரும் பத்தாம் தேதி தொடங்க உள்ள புதிய சீசனிலும் ஜேஎஸ்கே அணியின் கேப்டனாக டுபிளசிஸ் இருக்கிறார்.

இந்த தொடரில் ரீசா ஹென்ரிக்ஸ் என்ற தொடக்க வீரராக களம் இறங்குகிறார். அதேபோன்று மோயின் அலி, டேவிட் வீஸ், ரொமரியோ செப்பர்ட் போன்ற திறமையான வீரர்களும் ஜே எஸ் கே அணியில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதேபோன்று பராசக்தி எக்ஸ்பிரஸ் என ரசிகர்கள் அழைக்கும் இம்ரான் தாஹிர், தென்னாபிரிக்க வேகம் நான்ரே பர்கர் ஆகியோரும் இம்முறை ஜே எஸ் கே அணிக்காக விளையாடுகிறார்கள். ஜே எஸ் கே அணி தங்களுடைய முதல் போட்டியில் வரும் பத்தாம் தேதி அன்று சன்ரைசர்ஸ் உடன் மோதுகிறது.

ஜேஎஸ்கே அணி விவரம் -டுபிளசிஸ் (கேப்டன்), ரீசா ஹெண்ரிக்ஸ், தோனோவன் பெரொரியா, டுபிளாய், ஜெரால்ட் கோயிட்சே, நான்ரி பர்கர்,மோயின் அலி, டேவிட் வீசி, ஜாகிர் கான், ஷாம் கூக், வெயின் மெட்சன், லிசார்ட் வில்லியம்ஸ்,ரோமரியோ செஃபர்ட், இம்ரான் தாகிர், ஆரன் பங்கிசோ, குளோரி, கைல் சிம்மண்ஸ், டய்யான் கேலியம்,ரொனான் ஹெர்மன்