ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த குர்ஜப்னீத் சிங் என்ற வீரர் காயம் காரணமாக தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார். இதனை அடுத்து சிஎஸ்கே அணி அவருக்கு பதிலா தென்னாப்பிரிக்க வீரர் பிரவீஸ் சேர்த்திருக்கிறது.
சிஎஸ்கே அணியில் ஒரு வெளிநாட்டு வீரருக்கு இடம் காலியாக இருந்த நிலையில், தற்போது குர்ஜப்னீத் சிங் பதிலாக டிவால்ட் பிரவீஸ், சிஎஸ்கே அணியால் தேர்வு செய்ய முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 230 ரன்கள் அடித்திருக்கிறார்.
நல்ல பார்மில் பிரவீஸ்:
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 133 அளவில் இருந்தது. குட்டி ஏ பி டிவில்லியர்ஸ் என்று ரசிகர்களால் போற்றப்படும் பிரவீஸ், ஐபிஎல் தொடரில் பெரிய அளவு சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த பெயரை காப்பாற்ற வில்லை.இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுக்காமல் விட்டது.
இந்த தருணத்தில் தான் பிரவீஸ் சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ 20 தொடரில் எம்ஐ கேப்டன் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 291 ரன்கள் அடித்திருந்தார். இதில் அவருடைய சராசரி 48 ஆகும். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 184 என்ற அளவில் இருந்தது.
10 இன்னிங்ஸில் அவர் 25 சிக்ஸர்களை விளாசி இருந்தார். மேலும் 17 பௌண்டரிகளும் அவர் அடித்து இருந்தார். நல்ல பார்மில் இருந்த பிரவீஸின் அடிப்படை விலை ஐ பி எல் ஏலத்தின் போது இரண்டு கோடியே 20 லட்சம் ரூபாயாக இருந்தது.
பேட்டிங் பலம் பெறுமா?:
ஆனால் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் பிரவீஸ் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக தயாராக இருந்தார். தற்போது சிஎஸ்கே அணியின் குருபஜனீத் சிங் பதிலாக அவர் மாற்றுவீரராக களமிறங்க உள்ளார். இதன் மூலம் சிஎஸ்கே அணியின் பலம் அதிகரித்து இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதேபோல்தான் சிஎஸ்கே அணி தொடரின் பாதியில் ஆஸ்திரேலிய வீரர் பொலிங்கரை பந்துவீச்சு படையில் சேர்த்தது.
இதையும் படிங்க: மேக்ஸ்வெல் ஐபிஎல் உங்களுக்கு சாதாரணமா போச்சா?.. வேற யாராவது இருந்தா நடக்கிறதே வேற – புஜாரா விமர்சனம்
அவர் வந்தவுடன் சிஎஸ்கே அணி தொடர் வெற்றிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை அந்த ஆண்டு வென்றது. தற்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், பிரவீஸ் வருவதன் மூலம் சிஎஸ்கே அணியின் பேட்டி மீண்டும் பழையபடி க்ளிக் ஆகும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.இந்த சூழலில் பிரவீஸ் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.






