தற்போது நடைபெற்று வரும் 2025 துலீப் டிராபி செமி பைனலில் சென்ட்ரல் ஜோன் அணிக்கு எதிராக வெஸ்ட் ஜோன் அணிக்காக ருதுராஜ் மெகா சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
இன்று துலீப் டிராபியின் அரைஇறுதி போட்டிகள் துவங்கியது. சவுத் ஜோன் அணி நார்த் ஜோன் அணியை எதிர்த்தும், வெஸ்ட் ஜோன் அணி சென்ட்ரல் ஜோன் அணியை எதிர்த்தும் போட்டியிடுகின்றன.
ஜெய்ஸ்வால் ஸ்ரேயாஸ் ஐயர் ஏமாற்றம்
இதில் பெஸ்ட் ஜோன் அணிக்காக முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய ஜெய்ஸ்வால் 3 பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறாத இவருடைய பேட்டிங் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம் தந்தார்.
இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பதற்கு முக்கியமான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 28 பந்தில் 25 ரன்கள் எடுத்து கலில் அகமத் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து இவரும் ஏமாற்றம் தந்தார்.
மிரட்டிய ருதுராஜ்
பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வந்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் அதிரடியாகவும் அதே நேரத்தில் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 206 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 184 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருடைய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2025.. இந்த பெரிய அணி முதல் சுற்றிலேயே வெளியேறிவிடும்.. ஆகாஷ் சோப்ரா
இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாடி முடித்ததும் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் பேட்டிங் வரிசையில் 6வது இடத்தை பிடிக்க ருதுராஜ், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகியோருக்கு இடையில் போட்டி காணப்படுகிறது. இந்த நிலையில் ருதுராஜ் மெகா சதம் அடித்து தேர்வாளர்களுக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்.






