இன்று ஐபிஎல் தொடரில் வான்கடை மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடுகிறது. இந்தப் போட்டி குறித்து ருதுராஜ் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. இந்த போட்டியிலும் தோனி விளையாடவில்லை. மேலும் ஆயுஸ் மத்ரே இடத்திற்கு கார்த்திக் சர்மா கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
நாங்களும் இதையே செய்திருப்போம்
மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த போட்டியில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இம்பேக்ட் பிளேயரில் தொடக்க ஆட்டக்காரராக டேனிஸ் மலேவர் தொடர்கிறார். அந்த அணி கடந்து போட்டியில் வெற்றி பெற்றதால் நம்பிக்கை உடன் இருக்கிறது.
இந்த போட்டி குறித்து பேசி உள்ள ருதுராஜ் “நாங்கள் டாஸ் வென்று இருந்தாலும் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருப்போம். ஆனால் இங்கு வாய்ப்பு 50 சதவீதம்தான் எல்லாவற்றுக்கும் இருக்கிறது. நீங்க விளையாடும் பொழுது பேட்டிங் பவுலிங் எதுவாக இருந்தாலும் முதலில் நன்றாக விளையாட வேண்டும். அதனால் முதலில் பேட்டிங் செய்தாலும் நன்றாக விளையாட வேண்டும்”
தோனிதான் எல்லாமே
“நாங்கள் தற்போது நன்றாகத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறோம். கடந்த போட்டியில் பந்துவீச்சில் இறுதியாக சிறப்பாக கட்டுப்படுத்தினோம். அதே சமயத்தில் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக தொடங்கினோம். ஆனால் அதை எடுத்துச் சென்று சரியாக முடிக்காமல் விட்டு விட்டோம்”
இதையும் படிங்க : தோனியால சாம்சனுக்கு பெரிய பிரச்சனை இப்ப உண்டாயிடுச்சு.. அவர் இப்ப வரணுமா?.. தலையால குழப்பம் ஆயிட்டாங்க – பத்ரிநாத் பேச்சு
“நாங்கள் எங்கு சென்று விளையாடினாலும் சிஎஸ்கே அணிக்கு ஆதரவு மிக அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் அந்த லெஜென்ட் மகேந்திர சிங் தோனிதான். அவர் இப்போது இல்லாதது வருத்தமே. ஆனாலும் அவரின் காரணமாக நாங்கள் எங்கு சென்று விளையாடினாலும் பெரிய ஆதரவு கிடைக்கிறது. இன்று ரசிகர்களை மகிழ்விக்க முடியும்” என்று நம்புகிறோம் எனக் கூறியிருக்கிறார்.






