இன்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் உர்வில் படேல் சேர்க்கப்பட்டார். குஜராத் அணியில் பிரசித் கிருஷ்ணா இடத்திற்கு அர்ஷத் கான் கொண்டுவரப்பட்டார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி தடுமாற கேப்டன் ருதுராஜ் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 60 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்தது. ரபாடா மூன்று விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் சிறப்பாக ஆடி 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். குஜராத் 18.4 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தோல்வி குறித்து கேப்டன் ருதுராஜ் பேசும்போது “நான் முதல் டைம் அவுட் முடிந்ததும் பிளம்மிங்கிடம் பாசிட்டிவாகவும் அட்டாக் செய்தும் விளையாடுகிறேன் என்று சொன்னேன். ஆனால் பந்து சில நேரங்களில் எதிர்பாராத அளவுக்கு பவுன்ஸ் ஆனது. நான் அதற்கு தகுந்தபடி மாறுகிறேன் என்றேன். ஆனா சொன்னதை என்னால் செய்ய முடியவில்லை”
“நீங்கள் சில நேரங்களில் கணிக்க முடியாது. கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று சொல்ல முடியாது. நாங்கள் பவர் பிளேயரில் அதிரடியாக ஆரம்பிக்கவில்லை. அடுத்து நான் முதல் இரண்டு பந்தில் இரண்டு பவுண்டரி உடன் ஆரம்பித்தேன். அதே வேகத்தில் எடுத்துச் செல்ல நினைத்தேன். விக்கெட்டுகள் வேகமாக விழுந்ததால் என்னால் முடியவில்லை”
இதையும் படிங்க : கில்லின் அந்த முடிவில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நீங்க கேட்ட பிளேயரை உள்ள கொண்டு வரோம் – ருதுராஜ் பேட்டி
“இன்று சஞ்சு மற்றும் உர்வில் படேல் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்த காரணத்தினால் இம்பேக்ட் பிளேயர் சர்பராஸ் கான் உடனே கொண்டு வர வேண்டியதாக இருந்தது. இதனால் எங்களால் முகேஷ் சவுத்ரியை இம்பேக்ட் பிளேயரில் கொண்டு வர முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.