கில்லின் அந்த முடிவில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நீங்க கேட்ட பிளேயரை உள்ள கொண்டு வரோம் – ருதுராஜ் பேட்டி

0
23
Ruturaj

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடுகிறது. இந்த போட்டி குறித்து அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் கில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் பிரசித் கிருஷ்ணா இடத்திற்கு அர்ஷத் கான் வந்திருக்கிறான். கொஞ்சம் சுழல் பகுதிக்கு சாதகமான ஆடுகளத்தில் குஜராத் 3 ஸ்பின்னர்களுடன் விளையாடுகிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணியில் மாற்றம்

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே உர்வில் படேல் சில அதிரடியான தொடக்கத்தை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் அவருக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சர்பராஸ் கான் இடத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்பேக்ட் பிளேயரில் சர்பாராஸ் கான் மற்றும் முகேஷ் சவுத்ரி இருக்கிறார்கள். ஒருவேளை விக்கெட் அதிகமாக சரிந்தால் சர்ப்ராஸ் கான் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

ருதுராஜ் பேச்சு

டாஸ் நிகழ்வில் பேசிய ருதுராஜ் கூறும்போது “இது கொஞ்சம் உலர்ந்த ஆடுகளம் போல் தெரிகிறது. நாங்கள் முதலில் விளையாடி ஒரு நல்ல ஸ்கோர் போட்டு அதை பாதுகாப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுடைய நம்பிக்கை உயர்ந்த நிலையில் உள்ளது. இந்த போட்டி பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. எனவே நிலைமைகளை நல்ல முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும்”

இதையும் படிங்க: கருண் நாயருக்கு நானா இருந்தா வாய்ப்பு தரவே மாட்டேன்.. ஒரு கேப்டனா இதை ஏத்துக்கவே முடியாது – ஷேவாக் கருத்து

“நாங்கள் மெது மெதுவாக முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இன்னும் ஒன்று இரண்டு பகுதிகளில் நாங்கள் நன்றாக விளையாட வேண்டும். எனக்கும் சில நல்ல துவக்கங்கள் கிடைத்துக் கொண்டு வருகிறது. மேலும் தற்போது ஒரு மாற்றம் செய்திருக்கிறோம் உர்வில் படேல் உள்ளே வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -