இந்திய கிரிக்கெட்

தோனி பாய் நீங்கள்தான் எப்போதும் தல.. திறமையை விட இதைத்தான் உங்களிடம் கற்றுக் கொண்டேன் – ருதுராஜ் நெகிழ்ச்சி

​ஐபிஎல் மற்றும் கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவரது தலைமைப் பண்பு மற்றும் எளிமை குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராட்ச் கெய்க்வாட் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

​குறிப்பாக சிஎஸ்கே அணியில் தோனியின் வழிகாட்டுதலில் வளர்ந்து தற்போது அணியை வழிநடத்தி வரும் ருத்ராட்ச் கெய்க்வாட், அவருடனான தனது மறக்க முடியாத நினைவுகளை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

​இதுகுறித்து ருத்ராட்ச் கெய்க்வாட் பேசும்போது “எளிமை. 2019 ஆம் ஆண்டு நான் முதன்முதலில் சிஎஸ்கே அணியில் இணைந்தபோது உங்களை முடிந்தவரை உன்னிப்பாகக் கவனித்ததன் மூலம் இந்த வார்த்தையின் சரியான அர்த்தத்தைக் கற்றுக்கொண்டேன். இத்தனை ஆண்டுகளில் நீங்கள் குவித்த அத்தனை சாதனைகளையும் தாண்டி நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் அதுதான்”

“உங்களுடன் டிரெஸ்ஸிங் ரூம், மைதானம் மற்றும் 22 யார்ட்ஸ் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதும், உங்களுடன் இணைந்து மேட்ச்களை பினிஷ் செய்வதும் தான் கனவுகள் நனவாகும் தருணம். நீங்கள் எப்போதும் எங்கள் தல, எங்கள் கேப்டன் மற்றும் எங்கள் தலைவர். எல்லாவற்றிற்கும் நன்றி மாகி பாய்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by