ஐபிஎல் 2027 ஏலத்துக்காக அணிகள் தங்கள் வீரர்களை விடுவித்த நிலையில், ஒவ்வொரு அணியின் கையிருப்பு தொகை எவ்வளவு என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. .
இந்த நிலையில் எந்தெந்த அணியின் கையில் எவ்வளவு தொகை இருக்கிறது என்ற முழுமையான விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அதிக தொகையுடன் முதலிடத்தில் இருக்க, குஜராத் டைட்டன்ஸ் அணி மிகக் குறைந்த தொகையுடன் கடைசி இடத்தில் உள்ளது.
அணிகள் தங்கள் அணியில் உள்ள காலியிடங்களை நிரப்ப இந்த தொகையைத்தான் பயன்படுத்தப் போகின்றன. குறிப்பாக எல்.எஸ்.ஜி அணியின் தலைமை குறித்துப் பேசும்போது, “வரவிருக்கும் மினி ஏலத்திற்கு எல்.எஸ்.ஜி அணி மிகப்பெரிய பலத்துடன் களம் இறங்குகிறது என்றும், இந்தத் தொகையை வைத்து அவர்கள் தரமான பிளேயர்களை டார்கெட் செய்வார்கள் என்றும்” கிரிக்கெட் விமர்சகர்கள் பேசி இருக்கிறார்கள்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) – ₹47.45 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) – ₹41.65 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) – ₹40.15 கோடி
டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) – ₹39.5 கோடி
மும்பை இந்தியன்ஸ் (MI) – ₹32.6 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) – ₹28.05 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) – ₹27.05 கோடி
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) – ₹18.6 கோடி
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) – ₹14.15 கோடி
குஜராத் டைட்டன்ஸ் (GT) – ₹8.75 கோடி