2027 ஐபிஎல் ஆக்ஷனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது நட்சத்திர வீரர்கள் உள்ளிட்ட 10 பேரை அணியிலிருந்து விடுவிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிரடி முடிவின் மூலம் அந்த அணியின் பர்ஸ் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது.
அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் எம்.எஸ். தோனி 4 கோடி ரூபாய் மதிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரஷாந்த் வீர் 14.2 கோடி ரூபாய்க்கும், பாஸ்ட் பவுலர் மேட் ஹென்றி 2 கோடி ரூபாய்க்கும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் மேத்யூ ஷார்ட் 1.5 கோடி ரூபாய்க்கும், சக் பௌல்க்சு மற்றும் மேக்னில் நொரோன்ஹா ஆகியோர் தலா 75 லட்சம் ரூபாய்க்கும் கழட்டிவிடப்பட்டுள்ளனர்.
அதேபோல் அமன் கான் 40 லட்சம் ரூபாய்க்கும், குல்தீப் யாதவ், ஆகாஷ் மத்வால் மற்றும் டயன் ஃபாரெஸ்டர் ஆகியோர் தலா 30 லட்சம் ரூபாய்க்கும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 10 வீரர்களின் விடுவிப்பு மூலம் சென்னை அணியின் கையிருப்பு பர்ஸ் தொகையில் 24.5 கோடி ரூபாய் கூடுதலாக இணைந்துள்ளது. வரவிருக்கும் ஆக்ஷனில் புதிய வீரர்களை வாங்க இந்தத் தொகை அணிக்குப் பெரிய பலமாக அமையும்.