அபார சிக்சர் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ள ருத்துராஜ் கெய்க்வாட்

0
453
Sachin Tendulkar and Ruturaj Gaikwad

விடுமுறை நாளான ஞாயிறு இன்று ஐ.பி.எல் தொடரில் இருபோட்டிகள். டெல்லி, லக்னோ அணிகள் மோதிய முதல் போட்டியில் லக்னோ அணி வென்றிருக்கிறது. இரண்டாவது போட்டியில் தற்போது மகாராஷ்ட்ராவின் புனே மைதானத்தில் மோதி வருகின்றன.

டாஸில் வென்ற ஹைதராபாத் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஹைதராபாத் கடந்த ஆட்டம் விளையாடிய அதே வீரர்களோடு களமிறங்கி உள்ளது. சென்னை அணியில் பிராவோ, சிவம் துபேவிற்குப் பதிலாக டிவோன் கான்வோ, சிமர்ஜித் சிங் இடம்பெற்று இருக்கின்றனர்.

- Advertisement -

சென்னை அணியின் ஆட்டத்தைத் துவங்க வந்த கான்வோ-ருதுராஜ் ஜோடி, ஹைதராபாத் அணி பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன் சேகரித்து வருகிறது. இதில் ருதுராஜ் யான் சென் ஓவரில் சிக்ஸர் அடித்து , 31வது இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை எட்டி, அதிவேகமாக ஐ.பி.எல்-ல் ஆயிரம் ரன்கள் அடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்திருந்த சச்சினின் சாதனையைச் சமன் செய்தார்.

ஐ.பி.எல்-ல் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்கள்

ருதுராஜ் 31 இன்னிங்ஸ்
சச்சின் 31 இன்னிங்ஸ்
ரெய்னா 34 இன்னிங்ஸ்
படிக்கல் 35 இன்னிங்ஸ்
ரிஷாப் 35 இன்னிங்ஸ்
கம்பீர் 36 இன்னிங்ஸ்
ரோகித் 37 இன்னிங்ஸ்
தோனி 37 இன்னிங்ஸ்
ரகானே 37 இன்னிங்ஸ்