இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் தொடர்ந்து கேப்டன் கில் ஐந்தாவது போட்டியில் விளையாட, இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் நீக்கப்பட்டிருக்கிறார். தற்பொழுது இது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
நடந்து முடிந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். மேலும் துவக்க வீரராக ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் இடம் பெற்று இருந்தார். அப்பொழுதே சுப்மன் கில் இடத்தில் ருதுராஜ் இடம்பெற வேண்டும் என பல விமர்சனம் செய்து வந்தார்கள்.
இதன் மூலமாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடங்களை டி20 கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லுக்கு கொடுப்பது என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துவிட்டது. அதனுடைய தொடர்ச்சியாக தற்பொழுதும் அதையே செய்து வருகிறது.
அதே சமயத்தில் ருதுராஜ் இந்த தொடரில் ஒரு அரைசதத்துடன் நான்கு போட்டிகளில் மூன்று இன்னிங்ஸ்களில் 66.50 ஆவரேஜில், 158.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 133 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவருடைய பேட்டிங் செயல்பாடு கில்லை விட சிறப்பாக இருக்கிறது.
இப்படி இருக்கும் பொழுது நான்காவது துவக்க வீரராக இருக்கும் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து விளையாட, ஆரம்பத்தில் இருந்து இந்திய டி20 அணியில் துவக்க வீரருக்கான இடத்திற்கு போட்டியிட்டு வரும் ருதுராஜ் நீக்கப்பட்டு இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி முன்னாள் வீரர்களுக்கும் விமர்சனத்தை உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: டிராவிட் அந்தத் தராக மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார்.. இந்தியா ஏ டீம்லயே ஆரம்பிச்சோம் – அக்சர் படேல் பேட்டி
மேலும் மூன்று வடிவ கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டாலும் கூட தற்போதைய சூழ்நிலைக்கு ருதுராஜுக்கு இடம் தருவதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவாக காணப்படுகிறது. எனவே திறமை இருந்தும் ருதுராஜ் கிரிக்கெட் வாழ்க்கை வீணாக்கப்படுகிறது என ரசிகர்கள் கடுமையாக குற்றம் சுமத்தி வருகிறார்கள்.