“பிச்சை கேட்க முடியாது” என்ற பயிற்சியாளருக்கு ஆன்ட்ரே ரசல் இன்ஸ்டாகிராமில் பதிலடி!

0
2345
Wi cricket

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தற்காலத்தில் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. கிரிக்கெட் வாரியத்திற்கும் வீரர்களுக்கும் இடையேயான உறவு மிக மோசமாக இருக்கிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் என்பது பல தீவுக் கூட்டங்களில் தொகுப்பு என்பதால் அவர்கள் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக ஒருங்கிணைந்து விளையாடுவதிற்கு முக்கியத்துவம் தருவதிலும் உணர்வு ரீதியாக தடைகள் இருக்கிறது!

மேலும் உடல் பலத்தில் சிறந்த பிறப்பிலேயே தடகள வீரர்களுக்கான உடலமைப்பைப் பெற்றுள்ள வெஸ்ட்இண்டீஸ் தீவுக் கூட்டத்தை சேர்ந்தவர்கள், கிரிக்கெட்டை விட்டு வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக உயரமான வெஸ்ட் இண்டீஸ் ஆட்கள் கூடைப்பந்து விளையாட்டை தேர்ந்தெடுத்து விளையாடி வருகிறார்கள். காரணம் அமெரிக்காவில் விளையாட்டு மிகப் பிரபலம். இந்த விளையாட்டை விளையாடி புகழ் பெறுவதின் மூலம் டாலரில் மிகப்பெரிய வருமானத்தையும், அமெரிக்காவில் குடியுரிமை கிடைக்க எளிதாக இருக்கிறது. இதனால் வளரும் தலைமுறைகள் கிரிக்கெட்டை விட்டு விலகுகிறார்கள்.

- Advertisement -

கிரிக்கெட் வாரியத்திற்கும் வீரர்களுக்கும் இடையே உறவு சுமுகமாக இல்லாததால், வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாடுவதை விட, மற்ற நாடுகள் நடத்தும் டி20 தொடர்களில் விளையாடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதன்மூலம் அவர்களுக்கு பெரிய புகழும் பணமும் கிடைக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாடும் பொழுது இது கிடைப்பதில்லை.

சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் மிகவும் விரக்தியாகப் பேசியிருந்தார். அவரது பேச்சில் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டு இருந்தது அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் இருவரையும்தான்.

- Advertisement -

எரிக் சிம்மன்ஸ் தன் பேச்சில் ” வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுங்கள் என்று வீரர்களிடம் பிச்சை கேட்க முடியாது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்று விருப்பம் இருந்தால், வீரர்கள் அதற்கு தகுந்தவாறு அட்டவணை அமைத்து தயாராக இருப்பார்கள். விருப்பம் இல்லை என்றால் அவர்கள் வேறு டி20 தொடர்களில் தான் பிசியாக இருப்பார்கள் ” என்று தெரிவித்து இருந்தார்.

ஆன்ட்ரே ரசல் கடைசியாக இந்திய அணிக்காக டி20 தொடரில் பங்கேற்றது, கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தான். அதற்குப் பிறகு அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடவில்லை. இதேபோல் சுனில் நரைனும் சில ஆண்டுகளுக்கு மேலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடவில்லை. இவர்கள் இருவருமே வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 தொடர்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்று விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளரின் கருத்துக்கு தற்போது ஆன்ட்ரே ரசல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” இப்படி பேசப்படும் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் அமைதியாகத்தான் இருக்க போகிறேன்” என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த பிரச்சனை வெடிக்கலாம் என்று தெரிகிறது. ஏனென்றால் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை போட்டி தொடங்க இருக்கிறது!

- Advertisement -