ருதுராஜ் பந்தை தடுத்தபொழுது 5 பெனால்டி ரன் கொடுத்திருக்க வேண்டும் – கவாஸ்கர் பரபரப்பு கருத்து!

0
59324
Ruturaj

சென்னை லக்னோ அணிகளுக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 16 வது சீசனின் ஆறாவது போட்டி பரபரப்பாக நடைபெற்ற முடிவடைந்து இருக்கிறது!

இந்தப் போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருத்ராஜ் 57 ரன்கள், கான்வே 47 ரன்கள், அம்பதி ராயுடு 27 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 217 ரன்கள் குவித்தது!

- Advertisement -

இதற்கு அடுத்து தொடர்ந்து விளையாடிய லக்னோ மணிக்கு துவக்க ஆட்டக்காரர் கையில் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் அரை சதம் அடித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு வந்தவர்களில் யாரும் பெரிதாக நிலைத்து நின்று விளையாடவில்லை. நிக்கோலஸ் பூரன் மட்டுமே 32 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு அச்சுறுத்தலை தந்தார்.

ஒரு கட்டத்தில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு 37 ரன்கள் தேவைப்பட்ட பொழுது 19 ஆவது ஓவரை வீசிய இளம் வீரர் ஹங்கர்கேக்கர் ஒன்பது ரன்கள் மட்டுமே விட்டுத் தந்தார். அந்த ஓவரை மெதுவாக வீசியதால் நான்கு பீல்டர்கள் மட்டுமே இருபதாவது ஓவரில் வெளியில் அனுமதிக்கப்பட்டார்கள்.

துஷார் தேஷ் பாண்டே வீசிய இருபதாவது ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வைடு மற்றும் நோ பால் வீசி 25 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதை அடுத்து பதோனி அவரது பந்தில் ஒரு ரிவர்ஸ் ஸ்கூப் ஷார்ட் விளையாடி பந்து பின்பக்கமாக சென்ற பொழுது, அனைவரும் அதை பவுண்டரி என்று எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் ருத்ராஜ் அபாரமாக தடுத்து மடக்கினார். லக்னோ அணி பவுண்டரி ஆசையில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தது.

- Advertisement -

இந்தச் சமயத்தில் ஆங்கில கமெண்ட்ரில் இருந்த சுனில் கவாஸ்கர், ருத்ராஜ் பந்தை தடுத்த பொழுது பந்து அவரது டவலில் பட்டது அதனால் பெனால்ட்டியாக 5 ரன்கள் லக்னோ அணிக்கு தரப்பட்டு இருக்க வேண்டும் என்று கருத்து கூறி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். தற்பொழுது இது சமூக வலைதளத்தில் பேச்சு பொருளாகி வருகிறது!

கீப்பரின் ஹெல்மெட், கீப்பரின் கழட்டி வைக்கப்பட்ட கிளவுஸ் இப்படியான பொருட்கள் மீது பந்து பட்டால் ஐந்து ரன்கள் விளையாடும் அணிக்கு பெனால்ட்டியாக தரப்படும். தற்பொழுது வீரர் வைத்திருக்கும் டவளின் மீது பட்டதற்கும் கவாஸ்கர் இதைக் கூறியிருக்கிறார்.