சென்னை அணி இதைச் செய்தால் மட்டுமே மீண்டும் எப்போதும் போல் சிறப்பாக விளையாடும் – ஆர்.பி.சிங் கருத்து

0
165
RP Singh about CSK

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில் புதிய வீரர்களின் எழுச்சி, இளம் இந்திய வீரர்கள் வெளிவருவது, எதிர்பாராத திருப்பங்களோடு, பரபரப்பான ஆட்டங்கள் என களைக்கட்ட ஆரம்பித்திருக்கிறது. கூடவே பந்து ஆரம்பத்தில் ஸ்விங் மற்றும் ஸீம் ஆவதும், பனிப்பொழிவு இருப்பதும் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன!

இந்த ஐ.பி.எல் தொடர் பெரிய வெற்றியடைவதற்கான எல்லாக் காரணிகள் இருந்தும், டி.ஆர்.பி ரேட்டிங்கில் நொண்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. காரணம் ஐ.பி.எல் தொடரின் இரட்டை கதாநாயகர்களான மும்பையும் சென்னையும் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால்தான்.

- Advertisement -

இதில் சென்னை அணி ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத மாதிரி, தன் முதல் நான்கு ஆட்டங்களில் கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப், ஹைதராபாத் அணிகளிடம் தோல்வி கண்டு இரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனாலும் தன் ஐந்தாவது ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்காலும், சிற்சில மாற்றங்களாலும் பெங்களூர் அணியுடன் வெற்றியடைந்திருக்கிறது.

இந்த நிலையில் சென்னை அணி பற்றிக் கருத்துக்கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் “சென்னை அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டும் பலவீனமாக இருக்கிறது. இப்போது போல், சென்னை அணி எப்போதும் தன் இரண்டு மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு, தன் ப்ளேயிங் லெவனை அடிக்கடி மாற்றுவது நடக்காது. எல்லாம் நிச்சயமற்றதாகத் தெரிகிறது. இப்போதுள்ள சூழலுக்கு கேப்டனாக தோனி திரும்பவும் வந்தால், சில சிறப்பானவைகளைச் செய்வாரென்று தோன்றுகிறது” என கூறியுள்ளார்!