“ஆகாஷ் தீப்கிட்ட இருக்க ஸ்பெஷல் இது.. ராஞ்சி விக்கெட்ல இத கண்டுபிடிச்சிட்டாரு” – ஆர்பி.சிங் பாராட்டு

0
147
Deep

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது நான்காவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஒட்டுமொத்த தொடருமே மிகவும் வித்தியாசமானதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது.

இதுவரை நான்கு போட்டிகள் நடைபெற்று இருக்கும் நிலையில் இந்திய அணியின் சார்பில் நான்கு வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வெகுவேகமாக எதிர்கால வீரர்களை நோக்கி பயணிக்கிறது.

- Advertisement -

மேலும் இந்தியாவில் சில காலமாக சுழல் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த தொடரில் அப்படியான ஆடுகளங்கள் அமைக்கப்படவில்லை. மேலும் போட்டிகளும் இதனால் மூன்றாவது நாளில் முடிந்து சலிப்பை உருவாக்குவது இல்லை.

இந்த வகையில் தான் நான்காவது போட்டிக்கான ராஞ்சி ஆடுகளமும் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டார்.

பந்துவீச்சுக்கு பெரிய சாதகங்கள் இல்லாத ராஞ்சி ஆடுகளத்தில் மிகச் சிறப்பான முறையில் பந்துவீசி முதல் மூன்று இங்கிலாந்து விக்கெட்டுகளை பெற்றுத் தந்து இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தை ஏற்படுத்தித் தந்தார். நாளை அவர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கான வாய்ப்பிலும் இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஆர்பி.சிங் அவரை பற்றி கூறும்பொழுது “எப்பொழுதுமே நம் சொந்த மாநிலத்தை விட்டு வெளி மாநிலத்தில் விளையாடுவது கடினமான ஒன்று. நம் நாட்டில் இளம் கிரிக்கெட் வீரர்கள் நிறைய பேர் சொந்த மாநிலத்தில் விளையாடுகிறார்கள். எனவே நீங்கள் வெளிமாநிலத்தில் விளையாடி வாய்ப்பை பெறுவது கடினம்.

ஆனால் இப்படியான வாய்ப்பை ஆகாஷ் தீப் மிகச் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நியாயப்படுத்தி இருக்கிறார். ராஞ்சி மாதிரியான ஒரு ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளரால் என்ன தாக்கத்தை கொடுக்க முடியுமோ அதைச் செய்திருக்கிறார்.

இன்று அவரது பந்துவீச்சில் சிறப்பான விஷயம் என்னவென்றால், ராஞ்சி விக்கெட்டில் ஆப்ஸ் ஸ்டெம்ப்பின் மேல் பகுதியை அடிப்பதற்கான சரியான லென்த்தை அவர் கண்டுபிடித்தார். மேலும் பந்துவீச்சில் அவருடைய கையின் வேகம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இது அவருடைய ஸ்பெஷல். ஆனால் இது சாதாரணமான விஷயம் கிடையாது. முதல் போட்டியில் கொஞ்சம் பதட்டம் இருக்கும் ஆனால் அப்படி அவருக்கு எதுவுமே இல்லை” எனக் கூறியிருக்கிறார்.