சாம்சன் கோலிய வச்சு இந்த பிளான் பண்ணுங்க.. டி20 உலக கோப்பை இந்தியாவுக்குதான் – ஆர்பி சிங் உறுதி

0
178
Sanju

இந்திய அணி நாளைய டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடஇருக்கிறது.இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஆர்பி.சிங் சஞ்சு சாம்சன் ஏன் விளையாட வேண்டும் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். ரிஷப் பண்ட் இடது கை வீரராக இருக்கின்ற காரணத்தினால் அவருக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

ரிஷப் பண்ட் தனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் சரியாக விளையாடவில்லை என்றால் தான் சஞ்சு சாம்சன் விளையாட வைக்கப்படுவார் என்று பல முன்னாள் வீரர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இந்திய முன்னாள் வீரர் ஆர்பி சிங் வேறு விதமான ஒரு யோசனையை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து ஆர்பி.சிங் கூறும் பொழுது “என்னைக் கேட்டால் எனக்கு ரோகித் சர்மா உடன் விராட் கோலி துவக்க வீரராக வரவேண்டும். சஞ்சு சாம்சன் மூன்றாவது வீரராக 100% விளையாட வேண்டும். மேற்கொண்டு சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடலாம். இது டீம் காம்பினேஷனை பொறுத்தது. இதற்கு தகுந்தவாறு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் முடிவு எடுக்கலாம்.

நமக்கு ஒரு வீரராக என்ன முக்கியம் என்றால் அர்ப்பணிப்புதான் முக்கியம். இந்த வகையில் ஹர்திக் பாண்டியா நடப்பு ஐபிஎல் தொடரில் எல்லா போட்டியிலும் முடிந்த வரை நான்கு ஓவர்கள் பந்து வீசினார். எனவே ஹர்திக் பாண்டியாவின் செயல் திறன் இந்திய அணிக்கு முக்கியமானது. அவர் ஆரம்பத்திலேயே ஃபார்முக்கு வந்து விட்டால் அது அணிக்கு உதவும்.

- Advertisement -

இதையும் படிங்க: இந்தியாவுக்கு இவர்தான் டி20 உ.கோ-யை வாங்கி தருவார்.. ஆனா ரோகித் இதுக்கு சம்மதிக்கணும் – சுரேஷ் ரெய்னா பேச்சு

2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கடந்த விஷயம் இந்திய அணிக்கு ஊக்கப்படுத்த கூடியதாகத்தான் இருக்கும். ஏனென்றால் அந்தத் தொடரில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்தார்கள். மேலும் விராட் கோலி தற்பொழுது ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்றிருக்கிறார். பெரிய போட்டிகள் வரும் பொழுது அவர் சிறப்பான முறையில் விளையாடுவார்” என்று கூறியிருக்கிறார்