மயங்க் யாதவ் பெருசா ஒன்னும் பண்ணல.. ஆஸிக்கு அவர் போக முடியாது.. இவரே போகணும் – ஆர்பி சிங் கருத்து

0
78
Mayank

இந்திய அணியின் அதிவேக இளம் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் நாம் நினைப்பது போல மிகச் சிறந்த நிலையில் இல்லை என இந்திய முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஆர்பி.சிங் கூறியிருக்கிறார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் குவாலியரில் மயங்க் யாதவ் அறிமுகமானார். முதல் ஓவரை மெய்டனாக வீசி மொத்தம் 21 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். அதிகபட்சமாக மணிக்கு 149.9 கிலோமீட்டர் வேகத்தில் வீசினார். எனவே அவர் உடல் தகுதியுடன் இருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு செல்ல வேண்டும் என கருத்துக்கள் கூறப்படுகிறது.

- Advertisement -

அவரிடம் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை

மயங்க் யாதவ் குறித்து ஆர்பி.சிங் கூறும் பொழுது “அவர் தன்னுடைய முதல் ஓவரை மெய்டனாக வீசிய பொழுது அவருடைய துல்லியம் பற்றி அவருக்கு சில யோசனைகள் இருந்தது. அதை அவர் நல்ல முறையில் கண்காணித்துக் கொண்டார். வேகத்தை காட்டிலும் அது எவ்வளவு முக்கியம் என்பதை முதல் போட்டியில் பார்த்தோம். மேலும் முதல் போட்டி என்பதால் வயிற்றில் சில பட்டாம்பூச்சிகள் பறந்து இருக்கும்”

“ஆனால் அவர் உயர்ந்த நிலையில்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. அவரை தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நியாயம் செய்வதற்காக சில அளவுகோலில் இருந்து பந்து வீசினார். ஓரளவுக்கு துல்லியத்தை காட்டினார். ஆனால் இன்னும் அவர் தனது செயல் திறனை சிறப்பாக மாற்ற அவர் மேம்பட வேண்டிய பல இடங்கள் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை முதல் போட்டியில் அவர் செயல்பட்ட விதம் ஓகே அவ்வளவுதான்”

- Advertisement -

ஆகாஷ் தீப்தான் சிறந்தவர்

மேலும் பேசிய அவர் “ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடருக்கு ஆகாஷ் தீப் திறமையானவர். அவருடைய பந்துவீச்சு பாணி அங்கு சிறப்பான முறையில் பொருத்தமாக இருக்கும். மயங்க் யாதவுக்கு நல்ல வேகம் இருக்கிறது. ஆனால் வேகம் மட்டுமே போதாது இன்னும் நிறைய மாறுபாடுகள் தேவையாக இருக்கிறது”

இதையும் படிங்க : எங்க ஆஸ்திரேலியாவில்.. இந்த 2 இந்திய வீரர்கள் வேற மாதிரி ஆடுவாங்க ஜெயிக்க வைப்பாங்க – ஷேன் வாட்சன் கணிப்பு

“இப்போது மயங்க் யாதவ் வளரும் சூழ்நிலையில் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளராக சுமை அதிகம். நீண்ட கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுவதற்கு பொறுமையும் திறமையும் தேவை. அவருக்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஆனால் ஆகாஷ் தீப் நிறைய உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். எனவே அவர் பொருத்தமானவராக இருப்பார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -