கம்பீர் அஸ்வினை அவமானப்படுத்தினார்.. ஆனா கண்டிப்பா ஒரு நாள் அஸ்வின் பேசுவார் – மனோஜ் திவாரி பேட்டி

0
588

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று தனது ஓய்வு தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் அஸ்வினை தலைமை பயிற்ச்சியாளர் கௌதம் கம்பீர் அவமதித்ததாக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் அஸ்வினை அவமானப்படுத்தினார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதனை இந்திய முன்னால் வீரர்கள் உட்பட இந்திய ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அஸ்வின் ஓய்வு பெற்றது குறித்து அப்போதிருந்தே சில சர்ச்சைகள் உருவானது.

அஸ்வின் தொடரின் இறுதியில் தனது ஓய்வை அறிவித்திருக்க வேண்டும் எனவும் இது இந்திய அணிக்கு சிக்கலை உண்டாக்கும் எனவும் முன்னாள் வீரர்கள் கருத்துக்கள் கூறி வந்தனர். மேலும் உள்ளூர் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தரை உடனே இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டு அஸ்வினுக்கு பதிலாக விளையாட வைத்ததால் தான் அஸ்வின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்ததாக தகவல்கள் வெளிவரும் நிலையில் இதனை இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரியும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நிச்சயம் ஒருநாள் அஸ்வின் பேசுவார்

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அவமானப்படுத்தப்பட்டார். வாஷிங்டன் சுந்தர் மற்றும் தனுஷ்கோட்டியான் போன்ற வீரர்களை பாருங்கள். அவர்கள் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள். ஆனால் அஸ்வின் போன்ற திறமையான வீரர் உங்களிடம் இருக்கும் போது மேலும் அஸ்வினுக்கு இணையான குல்தீப் யாதவ் இருக்கும்போது உள்ளூர் தொடரில் விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தரை எதற்காக உடனடியாக இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

இதையும் படிங்க:இது இந்திய அணிக்கு நல்லதல்ல.. இந்த சர்ச்சை கேஎல் ராகுல் இல்லனா கோலியை சுத்தி நடக்குது – உத்தப்பா பேட்டி

அஸ்வினுக்கு பதிலாக அவருக்கு வாய்ப்பு கொடுத்து அஸ்வினை விட சுந்தருக்கு அதிகப்படியான ஓவர்கள் வழங்க காரணம் என்ன? இது அஸ்வினை அவமதிக்கும் செயல் போன்று இருக்கிறது அல்லவா? இந்த அவமதிப்பிற்குப் பிறகு இத்தனை வெற்றிகரமான போட்டிகளில் விளையாடிய பிறகு அவர் தொடர்ந்து விளையாடுவாரா? அஸ்வின் ஒரு நல்ல மனிதர் என்பதால் இது போன்ற விஷயங்களை வெளியே சொல்ல மாட்டார். ஆனால் நிச்சயமாக ஒரு நாள் இது குறித்து தனது கருத்தை பகிர்ந்து கொள்வார். இது சரியான செயல்முறை அல்ல” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -