தென்னாபிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் டிவில்லியர்ஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி குறித்து எழுதிய ஒரு கட்டுரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டிவில்லியர்ஸ்
உலக கிரிக்கெட்டின் ‘மிஸ்டர் 360’ என அன்போடு அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க அணியின் ஜாம்பவான் வீரராக திகழ்ந்த ஏபி டிவில்லியர்ஸ் தென்னாபிரிக்காவை தாண்டி உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். அதிலும் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவராவார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைந்து விளையாடியதன் மூலமாக இவரும் விராட் கோலியும் இணை பிரியா நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு முன்பாக டிவில்லியர்ஸ் விராட் கோலி குறித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் விராட் கோலியின் கடின உழைப்பு மற்றும் திறமை ஆகியவற்றை ஒருங்கிணைத்து சில தகவல்களை கூறி இருக்கிறார்.
விராட் கோலி ஓய மாட்டார்
இது குறித்து அவர் எழுதியதாவது “விராட் கோலி களத்தில் ஒரு தீவிரமான மருத்துவ நிபுணர் போல இருக்கிறார். தீவிரமாக கவனம் செலுத்தி, கடினமாக உழைத்து, மைதானத்தில் உள்ள இடைவெளிகளில் பந்தை விளையாடி, அழுத்தத்தின் கீழ் அவர் அமைதியாக இருக்கிறார். அவர் எப்போதுமே சரியான நேரத்தை ஒருங்கிணைப்பதற்கும் ஒரு போட்டியை கைப்பற்ற சரியான நேரத்தையும் தீர்மானிப்பார். விராட் கோலி நிஜமாகவே அற்புதமான திறமைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
இதையும் படிங்க:விராட் கோலி பாபர் அசாமை விட.. உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான் – பாக் முன்னாள் வீரர் கணிப்பு
அவர் எப்போதுமே உயர்ந்த சாதனையாளர்கள் போலவே அவரது திறமையை கடினமாக உழைக்கும் விருப்பத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறது. அவர் கவனிக்கப்படாமல் உறுதியுடனும் இடைவிடாத பயிற்சியுடனும் இருக்கிறார். அவர் விளையாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் வசதியாக இருப்பதை உறுதி செய்ய வலைகளில் போதுமான பயிற்சியை பெறுகிறார். அவர் தனது ஸ்ட்ரோக்குகளை மீண்டும் மீண்டும் ஒத்திகை செய்வதை நான் பணிகளில் கண்கூடாக பார்த்திருக்கிறேன். விராட் கோலியின் நெற்றியில் இருந்து வியர்வை வழியும் வரை, அவர் திருப்தி அடையும்வரை ஒருபோதும் நிறுத்த மாட்டார்” என்று பேசி இருக்கிறார்.