“ரோமாரியோ செப்பர்டு 44* அல்ஜாரி ஜோசப் 40/5 அசுர ஆட்டத்தில் தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்” – பரபரப்பான இறுதி ஆட்டத்தில் ஏழு ரன்களில் கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா !

0
912

மேற்கிந்திய தீவுகள் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது. இரண்டு டெஸ்ட் போட்டிகளை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் ஒரு நாள் போட்டி தொடர் 1-1 என்று சமநிலையில் முடிந்தது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதில் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி உலக சாதனை வெற்றியை பெற்றது. இந்நிலையில் நேற்று தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோகனேஷ்பெர்க் நகரில் வைத்து நடைபெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா மேற்கிந்திய தீவுகள் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணிந்தது . அந்த அணியின் துவக்க வீரர்களான பிரண்டன் கிங் மற்றும் கெயில் மேயர்ஸ் இருவரும் அதிரடியான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். மேயர்ஸ் 17 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் அதிரடியாக ஆடி வந்த கிங் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருக்க மறுமுனையில் அதிரடியாக ஆடி அணியின் இலக்கத்தை உயர்த்திக் கொண்டிருந்தார் நிக்கோலஸ் பூரன்.

அணியின் எண்ணிக்கை 110 ஆக இருந்தபோது சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நீக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிடி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார் . இவர் 4 இமாலய சிக்ஸர்களையும் இரண்டு பவுண்டரிகளையும் உலாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ரன்கள் வந்து கொண்டிருந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்களும் விழுந்து கொண்டிருந்தன . ஒரு கட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் 161 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஒன்பதாவது விக்கெட் இருக்கு ஜோடி சேர்ந்த ரொமாரியோ செப்பர்டு மற்றும் அல்ஜாரி ஜோசப் இருவரும் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மேற்கிந்திய தீவுகள் அணி 220 ரன்கள் எட்ட உதவினர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் ரொமாரியோ செப்பர்டு  ரபாதாவின் ஒரே ஓவரில் 26 ரன்களை விலாசினார்.

221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு அதன் கடந்த போட்டியின் நாயகனான டிகாக் 21 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றினார். அதன் பிறகு களம் இறங்கிய ரிலே ரூசோ மற்றும் துவக்க ஆட்டக்காரரான ரேஷா ஹென்றிக்ஸ் இருவரும் அதிரடியாக ஆடி தென்னாப்பிரிக்க அணியை போட்டிக்குள் வைத்திருந்தனர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரூசோ 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் மூன்று சிக்ஸர்களும் நான்கு பவுண்டரிகளும் அடங்கும்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய டேவிட் மில்லர் 11 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றினார். ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹென்றிக்ஸ் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அவரும் கேப்டன் மார்கரம் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைக்க முயன்றனர். இரண்டு ஓவர்களுக்கு 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அல்ஜாரி ஜோசப் சிறப்பாக பந்துவீசி ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றியை உறுதி செய்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹென்றிக்ஸ் 44 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 11 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். மேற்கிந்திய தீவுகள் அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ர்ம் இறுதி வரை போராடி 35 ரன்கள் உடன் ஆட்டம் விளக்காமல் களத்தில் இருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜான்சன் சார்லஸ் தொடர் நாயகனாகவும் ரொமாரியோ செப்பர்டு  ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.