எச்சரித்த ரோகித்.. வரலாற்றில் முதல் முறை கோலிக்கு நடந்த சோகம்.. சச்சினுடன் விசித்திர சாதனை!

0
1685
Rohit

தற்பொழுது இந்தியா இங்கிலாந்து அணிகள் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் லக்னோ மைதானத்தில் மோதி வருகின்றன.

இந்தப் போட்டிக்கு டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக முதலில் பேட்டிங் செய்கிறது.

- Advertisement -

இரண்டு அணிகளுமே இன்று அணிகளில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் கடந்த போட்டிகளில் விளையாடிய அதே அணியை களம் இறக்கி இருக்கின்றன.

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ரோகித் சர்மா சுப்மன் கில் வந்தார்கள். டேவிட் வெள்ளி ரோகித் சர்மாவுக்கு முதல் ஓவரை மெய்டனாக வீசினார்.

இதற்கு அடுத்து வோக்ஸ் ஓவரில் கில் ஒரு பவுண்டரி உடன் ஆரம்பித்தார். பிறகு அவர் வீசிய நான்காவது ஓவரில் கிளீன் போல்ட் ஆகி ஒன்பது ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

ரோகித் சர்மா வழக்கம் போல் இரண்டு சிக்ஸர்கள் உடன் ரன் ரேட்டை உயர்த்து முயற்சியில் ஈடுபட்டார். அவரது பேட்டிங் வழக்கம் போல் அதிரடியாகவே அமைந்தது.

இந்த நிலையில் களத்திற்கு உள்ளே வந்த விராட் கோலி இடம் ரோகித் சர்மா ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்கிறது என்பது குறித்து எச்சரிக்கை செய்திருந்தார்.

விராட் கோலியும் அதற்கு தகுந்தது போல முதல் 8 பந்துகளில் எந்த ரன்களும் இல்லாமல் எச்சரிக்கையாகவே விளையாடினார். விராட் கோலியின் இரண்டு பவுண்டரி ஷாட்களை ரன் ஏதும் இல்லாமல் இங்கிலாந்து பீல்டர்கள் மிகச் சிறப்பாக தடுத்தனர்.

ரன் இல்லாமல் எட்டு பந்துகளாக களத்தில் நின்ற விராட் கோலி டேவிட் வில்லி ஓவரில் இறங்கி வந்து விளையாட முயல, பந்து கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் ஆகி வந்ததால், வலிமையாக அடிக்க முடியாமல் உள்வட்டத்தில் இருந்த ஸ்டோக்ஸ் இடம் கேட்ச் ஆனது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ரன் ஏதும் இல்லாமல் முதல் முறையாக விராட் கோலி வெளியேறினார். மேலும் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி டக் அவுட் ஆவது இதுவே கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.

இந்தியா பேட்ஸ்மேன்களில் முதல் ஏழு இடங்களில் களம் இறங்குபவர்களில் சச்சின் 34 முறை டக் அவுட் ஆகி முதல் இடத்தில் இருந்தார். தற்பொழுது இந்த மோசமான சாதனையை விராட் கோலியும் பகிர்ந்து இருக்கிறார். அவரும் 34 முறை டக் அவுட் ஆகிய இந்திய பேட்ஸ்மேனாக இருக்கிறார். மூன்றாவது இடத்தில் 31 டக் அவுட் ஆகி வீரேந்திர சேவாக் இருக்கிறார்.

மேலும் விராட் கோலி இங்கிலாந்து அணி உடன்தான் விளையாடிய அணிகளில் அதிக முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக அவர் 11 முறையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்து ஆறுமுறையும் டக் அவுட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!