“ரோகித் அந்த முடிவு ரொம்ப தைரியமானது.. பாதுகாப்பை விட பாசிட்டிவிட்டி முக்கியம்” – ராகுல் டிராவிட் பேச்சு

0
1593
Dravid

நேற்று ஆப்கானிஸ்தான் இந்திய அணிகள் மோதிக்கொண்ட மூன்றாவது டி20 போட்டி இரண்டு சூப்பர் ஓவர்கள் வரை சென்று முடிவு கண்டது. ரசிகர்களுக்கு மிகப்பெரிய கிரிக்கெட் விருந்தாக அமைந்தது.

இந்திய அணி முதல் சூப்பர் ஓவரில் பந்துவீச்சில் பந்தை முகேஷ் குமார் கையில் கொடுத்தது. அவர் கடைசி ஓவரில் 18 ரன்கள் கொடுத்திருந்தார். குறிப்பிட்ட அந்த சூப்பர் ஓவரில் 16 ரன்கள் கொடுத்தார்.

- Advertisement -

இதற்கடுத்து மீண்டும் சூப்பர் ஓவரில் போட்டி டையாக இந்த முறை கேப்டன் ரோகித் சர்மா ரவி பிஸ்னாய் இடம் பந்தை கொடுத்தார். இது யாரும் எதிர்பார்க்காத முடிவாக அமைந்தது.

மேலும் நேற்றைய போட்டியின் முதல் சூப்பர் ஓவரின் கடைசி பந்துக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. அப்பொழுது பந்துவீச்சாளர் முனையில் இருந்த ரோகித் சர்மா ரிட்டைர்டு ஹர்ட் ஆகி ரிங் சிங்கை உள்ளே கொண்டு வந்து விட்டார். காரணம் இவர் அவரை விட வேகமாக ஓடுவார்.

இப்படி நேற்று ஆட்டம் துவங்கியது முதல் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் திறமை சார்ந்த உழைப்பு மட்டும் இல்லாமல், மூளை சார்ந்த விஷயங்களிலும் நிறைய வேலை செய்தார். தொடர்ந்து மூன்று முறை பேட்டிங் செய்ய வந்து மூன்று முறையிலும் சிக்ஸர்கள் அடித்தார்.

- Advertisement -

இதுகுறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “ரோகித் சர்மா தனது தைரியத்தை நம்பி நேற்று சென்றார். அந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்துவதற்கு சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு இருக்கிறது என்று அவர் நினைத்திருக்கிறார்.

11 ரன்கள் ஒரு பெரிய ஸ்கோர் ஆக இல்லாத பொழுது, ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் பலத்திற்கு இந்த ரன்களை எளிதாக எடுத்திருக்க முடியும். இந்த நேரத்தில் சுழற் பந்துவீச்சாளருடன் சென்றது கேப்டனின் சிறந்த முடிவு.

ரவி பிஸ்னாய் இரண்டு சிக்ஸர்களுக்கு போய் இருக்கலாம். ஆனால் அவர் பேக் ஆஃப் லென்த்தில் இரண்டு சிறந்த பந்துகளை வீசினார். சிறிய மைதானத்தில் இது பந்தை கொஞ்சம் மேலே வீசி இருந்தால் சிக்ஸர்கள் போயிருக்கும். இது ரோகித் இடமிருந்து தைரியமான முடிவு. மக்கள் எதிர்பார்ப்பதை போல பாதுகாப்பாக இருப்பதை விட, பாசிட்டிவாக இருப்பதுதான் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.