“இந்தியாவுக்கு பயமில்லாம விளையாட ரோகித் கத்துக் குடுக்கிறார்!” – கோலிக்கு நெருங்கிய இந்திய முன்னாள் வீரர் கருத்து!

0
2990
Rohit

இந்திய அணி இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு மிகவும் சமநிலையான ஒரு அணியுடன் சிறப்பான முறையில் தயாராகி வந்திருக்கிறது.

அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களை எடுத்துக் கொண்டால் ரோஹித் சர்மா, கில், விராட் கோலி, கேஎல்.ராகுல் நால்வரும் உலகத்தரமான பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் ஆல் ரவுண்டர்கள் என்று பார்த்தால் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா என உலகத்தரமான ஆல் கவுண்டர்கள் இருக்கிறார்கள்.

பந்துவீச்சுக்கு வரும் பொழுது மேட்ச் வின்னிங் பவுலர்கள் பும்ரா, சிராஜ், குல்தீப், சமி என இருக்கிறார்கள். நடப்பு உலக கோப்பையில் மிகவும் சரிசமமான கலவையை கொண்டிருக்கிற அணியாக இந்திய அணி இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்த அணி செய்ய வேண்டியது அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதுதான். இதற்கு தானே முன்வந்து அதிரடியாக விளையாடி மற்ற எல்லோரையும் அதே மனநிலைக்கு கொண்டு செல்கிறேன் என்று ரோகித் சர்மாவும் கூறி இருந்தார்.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறும் பொழுது “ஒரு வீரர் தன் ஷாட்களை ஆடத் தயங்கினால், அவர் தன்னுடைய விளையாட்டுத் திட்டத்தின் நிலையில் இருக்க மாட்டார். ரோகித் ஷாட்களை விளையாட ஊக்குவிக்கிறார். மேலும் என்ன நடக்கப் போகிறது என்பதையும் அவர் காட்டினார்.

இதே பந்துவீச்சாளர் என்றால் அவர்களுக்கும் அதேதான். சில நேரங்களில் அவர்கள் ரன்களுக்கு செல்லலாம். இது வீரர்களின் பயத்தை போக்கக்கூடிய மனநிலையை வளர்க்கிறது. அவர்களின் இயல்பான விளையாட்டை விளையாட உதவுகிறது.

இப்படி ரோகித் சர்மா வீரர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறார். அவர்களுக்கு சுதந்திரம் மற்றும் ஆதரவை தருவதின் மூலம் நம்பிக்கையை உண்டாக்குவது மற்றும் அவர்களை நம்புவது என்று இருக்கிறார்

ஓரிரு போட்டிகளில் மோசமான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தால் அது வலிக்கும். எனக்கு இரண்டு வீரர்கள் ஞாபகத்துக்கு வருகிறார்கள். ஒருவர் வீரேந்திர சேவாக். அவர் தன்னுடைய இயல்புகள் விளையாடும் பொழுது அற்புதமாக தெரிவார். ஆனால் ஆட்டம் இழந்தும் வெளியேறுவார்.

இதே மாதிரியானவர் ரிஷப் பண்ட். அவர் ஷாட்களில் ரிஸ்க் எடுக்க தயங்காதவர். இந்த மாதிரியான மனநிலையை எல்லா வீரர்களிடமும் உருவாக்கினால், எங்களிடம் குறைந்தது ஐந்து மேட்ச் வின்னர்கள்!” ஆவது இருப்பார்கள்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -