தென்னாபிரிக்கா டி20 தொடரை வெல்வதற்கு ரோகித் சர்மா இதை மட்டும் செய்தால் போதும் – சுனில் கவாஸ்கர் கருத்து!

0
776

டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடக்கும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா இதை மட்டும் செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

டி20 உலக கோப்பை தொடர் வருகிற அக்டோபர் மாதம் 16ஆம் தேதி துவங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இந்திய அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று தொடரையும் கைப்பற்றியது. இதனை அடுத்து நடைபெறவிருக்கும் தென் ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெறுவதால் வீரர்கள் அனைவரும் அங்கே சென்று விட்டனர்.

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக இது நடைபெறுவதால் இந்திய அணியில் யாரை எந்த இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று அறிந்து கொள்ள அணியில் வீரர்களை மாற்றி மாற்றி இறக்கி சோதனைகளை இந்திய அணி செய்து வருகிறது. இந்நிலையில் தென்னாபிரிக்கா தொடரை வெல்வதற்கு இந்திய அணி இதை மட்டும் செய்தால் போதும் என்று சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தி இருக்கிறார். அவர் கூறுகையில்,

“ரோகித் சர்மா போன்ற வீரர் அவசரப்பட்டு விளையாடி வருவதால் எளிதாக விக்கெட்டை இழந்து விடுகிறார். அதை தடுத்துக் கொள்ள குறைந்தது 10 முதல் 12 ஓவர்கள் விளையாட வேண்டும். ரோகித் சர்மா 10 ஓவர்கள் வரை களத்தில் இருந்தால் இந்திய அணியின் ஸ்கோர் நிச்சயம் 100 ரன்கள் கடந்து இருக்கும். அதற்கும் அடுத்ததாக ரோகித் சர்மாவின் அணியில் ஐந்து, ஆறு, ஏழு என ஏழாவது இடம் வரை விளையாடுவதற்கு பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் நன்றாக ஃபினிஷிங் ரோலில் விளையாடுகின்றனர். ஆகையால் ரோஹித் சர்மா குறைந்தபட்சம் 10-12 ஓவர்கள் வரை நிச்சயம் தென்னாப்பிரிக்கா தொடரை வென்று விடலாம். உலக கோப்பையிலும் இந்த யுக்தி பயன்படும்.” என கருத்து தெரிவித்துள்ளார்.