இந்திய கிரிக்கெட்

8 புள்ளி வித்தியாசம்.. ஐசிசி ODI ரேங்கில் கெத்து காட்டும் ரோகித் விராட்.. டாப் 10ல் இந்தியர்கள் அசத்தல் – முழு விபரங்கள்

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உச்சத்தில் அடுத்தடுத்த இடங்களை பிடித்து அசத்தியிருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் ஒட்டுமொத்தமாக இந்திய பேட்ஸ்மேன்கள் ஐந்து பேர் முதல் 12 இடங்களில் இருக்கிறார்கள். இது இந்திய பேட்டிங் யூனிட் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் எப்படியான ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

8 புள்ளிகள் வித்தியாசம்

ரோகித் சர்மா ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார். பிறகு தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் 2 அரைசதங்கள் அடித்தார். இதேபோல விராட் கோலி ஆஸ்திரேலியா தொடரில் ஒரு அரைசதமும், தென் ஆப்பிரிக்க தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார்.

இதன் காரணமாக ரோஹித் சர்மா 781 புள்ளிகள் உடன் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறார். இந்த நிலையில் நான்காவது இடத்தில் இருந்த விராட் கோலி 773 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். சமகாலத்தில் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் நிகழ்வு நடைபெற்று இருக்கிறது.

- Advertisement -

டாப் 10-ல் அசத்தல்

மேலும் இந்திய கேப்டன் சுப்மன் கில் 723 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 679 புள்ளிகள் உடன் பத்தாவது இடத்திலும் இருக்கிறார்கள். இந்த வகையில் மொத்தம் முதல் 10 இடத்தில் நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் கேஎல்.ராகுல் இரண்டு இடங்கள் முன்னேறி 649 புள்ளிகள் உடன் 12வது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : எனக்காகத்தான் கூட்டம் காத்திருக்கு.. எத்தன எலுமிச்சை பழத்தை வேணாலும் எறிங்க பரவால்ல – ஹர்திக் பாண்டியா பேச்சு

மேலும் தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில் சதம் அடித்த இளம் வீரர்கள் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் முதல் 100 இடங்களுக்குள் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் பேட்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.

- Advertisement -
Published by

Recent Posts