175 ரன்.. ODI கிரிக்கெட்டை மறந்த இங்கிலாந்தின் சோகம்.. வச்சு செய்த நியூசிலாந்து.. தொடரை கைப்பற்றி அபாரம்

0
240
England

தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றியது.

தற்போது இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை நியூசிலாந்து அணி வென்று தொடரில் முன்னிலை வகித்து வந்தது.

- Advertisement -

மீண்டும் சுருண்ட இங்கிலாந்து

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஜேமி ஸ்மித் 13, பென் டக்கெட் என அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதைத்தொடர்ந்து ஜோ ரூட் 25, ஜேக்கப் பெத்தேல் 18, கேப்டன் ஹாரி புரூக் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

கடைசி கட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் ஜேமி ஓவர்டன் தாக்குப்பிடித்து விளையாடி அதிரடியாக 28 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 36 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

நியூசிலாந்து வெற்றி

இதைத் தொடர்ந்து விளையாட வந்த நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களில் வில் யங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழக்க, இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா 58 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வில்லியம்சன் 21 ரன் எடுத்து வெளியேறினார்.

இதையும் படிங்க : 194 ரன்.. டி20க்கு திரும்ப வந்த பாபர் அசாம் செய்த காரியம்.. பாகிஸ்தான் பரிதாபம்.. தென் ஆப்பிரிக்கா வெற்றி

இதற்கு அடுத்து மிடில் வரிசையில் டேரில் மிட்சல் ஆட்டம் இழக்காமல் 59 பந்தில் 56 ரன், கேப்டன் மிடசல் சான்ட்னர் ஆட்டம் இழக்காமல் அதிரடியாக 17 பந்தில் 34 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 33.1 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஒருநாள் கிரிக்கெட்டை எப்படி விளையாடுவது என்று மறந்து போய்விட்ட இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

- Advertisement -