ரோகித் சர்மா இரண்டாவது புதிய பந்தை எடுத்திருக்கக் கூடாது ; எடுத்தும் இதை செய்ய தவறிவிட்டார்! – தினேஷ் கார்த்திக் ரோஹித் சர்மா கேப்டன்சி பற்றி பரபரப்பு பேச்சு!

0
229
DK

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்பொழுது அகமதாபாத் மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல்விக்கட்டுக்கு 50 ரன்கள் சேர்த்து ஹெட் ஆட்டம் இழக்க, அபாரமாக விளையாடிய உஸ்மான் கவஜா சதம் அடித்து களத்தில் இருக்கிறார். இறுதிக்கட்டத்தில் அவருக்கு துணையாக விளையாடிய கேமரூன் கிரின் ஆட்டம் இழக்காமல் 49 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். முதல் நாள் ஆட்டம் முடிவின்போது ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது!

- Advertisement -

இந்த முதல் நாள் ஆட்டத்தில் முதல் ஒரு மணி நேரத்தில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ரன்கள் குவிக்க, பிறகு இழுத்துப் பிடித்த இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை பெற்றது. அதேபோல் கவஜா மற்றும் ஸ்மித் விளையாடிய இரண்டாவது செஷனில் இந்திய அணி மிக கட்டுப்பாடாகப் பந்து வீசியது.

தற்பொழுது இந்த டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி பற்றி பேசி உள்ள தினேஷ் கார்த்திக் ” இன்றைய நாள் முழுவதும் நான் விரும்பும் விதமாக இருந்தது. ரோஹித் சர்மா களத்தில் முனைப்புடன் செயல்பட்டார். வழக்கமான சில்லி பாயிண்ட், ஷார்ட் லெக் பீல்டிங் பொசிஷன் கலை அவர் பயன்படுத்தவில்லை. மேலும் எளிதான அடிப்பதற்கு பந்துகளையும் தரவில்லை. களத்தை மிகவும் இறுக்கமாக வைத்திருந்தார். முதல் ஒரு மணி நேரத்திற்கு பிறகு முன்னேறி நான்கு விக்கட்டுகளை கைப்பற்றினார். ஆட்டத்தின் நடுத்தரக் கட்டத்தில் கவாஜா மற்றும் ஸ்மித் விளையாடிய பொழுது அவர்களுக்கு ரண்களை வழங்காமல் மிகவும் கட்டுப்பாடாக வைத்திருந்தார்!” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஆனால் 80 ஓவர்களுக்குப் பிறகு புதிய பந்தை அவர் எடுத்தது சரி என்று நான் நினைக்கவில்லை. அவர் மேற்கொண்டு புதிய பந்தில் 10 ஓவர்கள் வீச வேண்டுமா அல்லது 4, 5 ஓவர்கள் வீச வேண்டுமா என்று யோசித்து இருக்க வேண்டும். ரோகித் சர்மா கேப்டன்ஷியில் இதுவரை அக்சர் பட்டேல் ஒரு சுவாரசியமான கேஸ் ஸ்டடி. ரோகித் சர்மா அஸ்வின் மற்றும் ஜடேஜா என இரு சுழற் பந்துவீச்சு தூண்களை கொண்டு உள்ளார். எனவே அவர்களுக்கு அவர் அதிக ஓவர்களை கொடுக்கிறார். ஆனால் இந்தக் கலவையில் அக்சர் படேல் எங்கு இருக்கிறார்? அவர் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளரா? புதிய பந்தில் அவர் சிறப்பாக பந்து வீசக்கூடியதை நாம் பார்த்திருக்கிறோம். குறைந்தபட்சம் புதிய பந்தை எடுத்த பிறகு அவர் அதில் பந்து வீசி இருக்க வேண்டும். ஆனால் ரோஹித் அதற்கு வாய்ப்பு தரவில்லை!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” மேலும் ஒரு கேப்டனாக மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை அணியில் வைத்திருந்தால் அவர்களை நிர்வகிப்பது கடினம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுழற் பந்துவீச்சாளர்கள் நீண்ட ஸ்பெல்களை வீசுகிறார்கள். அதே சமயத்தில் அக்சர் படேலை அவர் குறைவாக பயன்படுத்தி விட்டார் என்றும் நாம் உணர்கிறோம். இப்படி ஒருவர் இருக்கும் பொழுது ஒரு மாதிரியும் இல்லாத பொழுது ஒரு மாதிரியும் தோன்றும் எனவே இந்த விஷயத்தில் நான் ரோகித்தை அதிகம் குறை சொல்ல மாட்டேன்!” என்று கூறியிருக்கிறார்!