மாணிக்கமா இருந்தவர், பாட்ஷாவாக மாறுகிறாரா? – பயிற்சியில் பட்டைய கிளப்பும் ரோகித் சர்மா!

0
9390

கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் இருவரும் மும்பையில் அதிதீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னணி துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் இருவரும் டி20 உலக கோப்பை தொடரில் படுமாசமாக விளையாடினர். இதன் காரணமாக தீவிர விமர்சனத்திற்கு உள்ளாகினர்.

- Advertisement -

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, 6 போட்டிகளில் 116 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இவரது சராசரி 19.33 ஆகும். துணை கேப்டன் கேஎல் ராகுல் 6 போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் உட்பட 128 ரன்கள் அடித்திருந்தார். இவரது சராசரி 21.3 ஆகும்.

இவர்கள் இருவருமே சோதப்பியதால் தொடர் முழுவதும் சரியான துவக்கம் கிடைக்காதது பெருத்த பின்னடைவை கொடுத்தது. இந்திய அணிக்கு அரையிறுதி போன்ற மிக முக்கியமான போட்டியிலும் இவர்கள் சொற்பரன்களில் வெளியேறியது மேலும் விமர்சனத்தை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் இவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நியூசிலாந்து தொடரில் கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. ஒருவாரம் ஓய்வுக்கு பின்னர் விராத் கோலி டெல்லியிலும் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் மும்பை கிரிக்கெட் அசோசியேசனுக்கு உட்பட்ட மைதானத்திலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் இந்திய அணி பங்களாதேஷ் செல்கிறது. ரோகித், ராகுல், விராட் கோலி ஆகியோர் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி பங்களாதேஷ் சென்று இந்திய வீரர்களுடன் இணைய உள்ளனர்.

டிசம்பர் நான்காம் தேதி வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. மீண்டும் ரோகித் சர்மா தனது கேப்டன் பொறுப்பிறகு திரும்புகிறார்.

இந்த வாரம் முழுவதும் ரோகித் சர்மா மும்பையில் உடற்பயிற்சி மற்றும் வலை பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட புகைப்படம் ஒன்று பலரையும் கவர்ந்திருக்கிறது. அதில் ரோகித் சர்மா அடிக்கும் ஷாட், அச்சு அசலாக ஐபிஎல் லோகோவை போலவே இருக்கிறது.

மேலும் பயிற்சியின்போது, ரோகித் சர்மா உடல் எடை குறைந்தது போல காணப்படுகிறார். இதுவும் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரோகித் சர்மா போன்று மிகப்பெரிய செஞ்சுரி அடிக்கக்கூடிய வீரர் மீண்டும் தனது பழைய பார்மிற்கு திரும்பினால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும். குறிப்பாக கேப்டன் பொறுப்பில் இருக்கும் அவருக்கு நல்ல மனநிலையையும் கொடுக்கும். இதன் காரணமாக வரும் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் எடுக்கும் முடிவுகளும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.