இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து ஆட்டம் இழந்து இருக்கிறார்.
இன்று ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்திருக்கிறது.
இந்த போட்டியில் மிக முக்கிய தேர்வாக ஜெய்ஸ்வால் துவக்க ஆட்டக்காரராகவும் ருதுராஜ் நான்காவது இடத்திற்கும் இந்திய பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட்டார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆரம்பித்து 16 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 47 பந்துகளிலும் ரோகித் சர்மா 43 பந்துகளிலும் அரை சதம் அடித்து, நூறு ரன் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
இதைத்தொடர்ந்து ரோஹித் சர்மா 51 பந்துகள் சந்தித்து 57 ரன்கள் எடுத்து யான்சன் பந்துவீச்சில் எல்பிடபிள்யு மூலம் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து களத்தில் விராட் கோலி ரோஹித் சர்மாவை மூன்றாவது நடுவரிடம் ரிவியூ செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் பந்து தாழ்வாக வந்ததால் நிச்சயம் அவுட் ஆக இருக்கும் எனவே ரிவ்யூ செய்து அதை இழக்க வேண்டாம் என ரோகித் சர்மா மறுத்து வெளியேறிவிட்டார்.
இதையும் படிங்க: ராஞ்சியில் ரெக்கார்டுகளை கொட்டும் ரோகித் விராட் ஜோடி.. சச்சின் டிராவிட் உலக சாதனை காலி.. அதிரடி பேட்டிங் அசத்தும் இந்தியா
ரோகித் சர்மாவுக்கு சதம் அடிப்பதற்கான வாய்ப்பு இருந்தாலும் கூட, தன்னுடைய தனிப்பட்ட இலக்குக்காக ரிவ்யூவை இழக்க வேண்டாம் என ரோகித் சர்மா வெளியேறியது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. ரீப்ளேவில் பார்த்த பொழுது அது கிளீன் எல்பிடபிள்யு என தெரிந்தது.