ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியதற்கான வெற்றி ஊர்வலம் மற்றும் பாராட்டு விழா நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முடிந்தது. இந்த நிலையில் பிசிசிஐ வீடியோவில் பேசி இருக்கும் ரோஹித் சர்மா தோனி தலைமையிலான 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றியை விட தற்போதைய டி20 உலகக்கோப்பை வெற்றி தனக்கு சிறப்பானது என்று கூறி இருக்கிறார்.
இந்திய அணி முதன் முதலில் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய இருந்தது. அதற்குப் பிறகு 20 வருடங்கள் தாண்டியும் இந்திய அணி ஒரு உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற முடியவில்லை. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அதன் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என எல்லோருக்கும் உலகக் கோப்பை குறித்தான பெரிய ஏக்கம் இருந்தது.
இந்த நிலையில் ஐசிசி முதன் முதலில் டி20 வடிவத்திற்கு 2007 ஆம் ஆண்டு நடத்திய உலகக் கோப்பை தொடரை, மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி எதிர்பார்க்காத வகையில் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தியது. 24 ஆண்டுகள் கழித்து ஒரு உலகக் கோப்பை தொடர் இந்தியாவிற்கு கிடைத்த காரணத்தினால் ரசிகர்களுக்கு அது மிகச் சிறப்பான ஒன்றாக இருந்தது.
2007 ஆம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இளம் வீரராக ரோஹித் சர்மா இடம்பெற்றதோடு விளையாடியும் இருந்தார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஆரம்பத்திலேயே அவருக்கு ஒரு உலகக் கோப்பை தொடரை வென்ற அணியில் இடம் கிடைத்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று டி20 உலகக்கோப்பையை வென்ற வெற்றி ஊர்வலம் மற்றும் பாராட்டு விழாவில் பங்கு எடுத்ததற்கு பின்னால், டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு டி20 உலகக் கோப்பை வெற்றிகள் குறித்தும் தன்னுடைய எண்ணத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறும் பொழுது ” 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றி தந்த உணர்வு வித்தியாசமானது. நாங்கள் வெற்றி ஊர்வலத்தை மதியத்தில் நடத்தியிருந்தோம். தற்பொழுது இது மாலையில் நடக்கிறது. என்னுடைய முதல் உலகக் கோப்பை வெற்றியான அதை எப்பொழுதும் மறக்க முடியாது. அதே சமயத்தில் இந்த டி20 உலக கோப்பை தொடர் வெற்றி அணியை நான் வழி நடத்திய காரணத்தினால் சிறப்பான ஒன்றாகவும், பெருமைக்குரிய ஒன்றாகவும் இருக்கிறது.
இதையும் படிங்க : மில்லர் கேட்ச்.. அம்பயர் எந்த முடிவு எடுத்திருந்தாலும்.. நாங்க இததான் பண்ணி இருப்போம் – மௌனம் கலைக்கும் கேசவ் மகாராஜ்
இது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது. இங்கு நிறைய உற்சாகம் வெளிப்படுத்தப்படுகிறது. இது எங்களுக்கு மட்டுமல்ல முழு தேசத்துக்கும் எவ்வளவு அர்த்தம் வாய்ந்தது என்று தெரிகிறது. இந்த வெற்றிக்கு நிறைய அர்த்தம் இருக்கிறது. எனவே நம் மக்களுக்காகவும் நாங்கள் இதைச் செய்ததில், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.