சிஎஸ்கே ரசிகர்களே எனக்கு இத செஞ்சது சந்தோஷமா இருக்கு.. அவங்கதான் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் – ரோகித் சர்மா

0
385

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா பேட்டிங் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா சிறப்பான ஆட்டம்

இந்த போட்டியைப் பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை மிடில் வரிசை ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளை எதிர் கொண்டு 53 ரன்கள் குவித்தார். மற்றும் சிவம்தூபே 32 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாத ரோகித் சர்மா இந்த போட்டியில் சிறப்பாக தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்தார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடுவதை விடுத்து தேவையான சமயங்களில் தனது கியரை மாற்றி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து சில சிஎஸ்கே ரசிகர்களே அவரை உற்சாகப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 45 பந்துகளை எதிர் கொண்ட ரோகித் சர்மா 76 ரன்கள் குவித்து மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவருக்கு பக்கபலமாக சூரியகுமார் யாதவ் 30 பந்துகளை எதிர் கொண்டு 68 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

எனக்கு அதுவே திருப்தி அளிக்கிறது

இந்த சூழ்நிலையில் தனது பேட்டிங் குறித்து ரோகித் சர்மா பேசும்போது “சில சிஎஸ்கே ரசிகர்கள் நான் விளையாடும் விதத்தை பார்த்து எனக்கு உற்சாகம் அளித்தனர். அவர்கள் கிரிக்கெட்டை ரசிக்க கூடிய ரசிகர்கள். அதுதான் இந்த வான்கடே மைதானத்தின் சிறப்பம்சமாகும். எனது பேட்டிங்கை பொருத்தவரை எனக்கு எளிய விஷயங்களை செய்வதும் தெளிவான மனநிலையில் இருப்பதும் மிகவும் முக்கியம். நாம் எப்படி விளையாட வேண்டும், இன்னிங்ஸ் எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதுதான் போட்டியில் கவனிக்க வேண்டிய விஷயமாகும். கடைசி இரண்டு அல்லது மூன்று ஓவர்களில் இம்பாக்ட் பிளேயராக வருவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

இதையும் படிங்க:இன்னும் 2 மேட்ச் தொடர்ந்து தோற்றால்.. தயங்காம இந்த வேலையை சிஎஸ்கே கட்டாயம் செய்யும் – எம்எஸ் தோனி பேட்டி

17 ஓவர்கள் களத்தில் இல்லாத போது அப்படி வருவது எளிதான விஷயம் கிடையாது. ஆனால் உடனே நான் பேட்டிங் செய்ய வேண்டும் என்று எனது அணி விரும்பினால் அது குறித்து எனக்கு கவலை இல்லை. என்னை பொருத்தவரை கடைசி வரை இருந்து போட்டியை வெற்றிகரமாக முடிப்பதை எனக்கு முக்கியமாகும். அதுவே எனக்கு திருப்தி இருக்க கூடிய விஷயமாக இருக்கிறது. நாங்கள் இப்போது சரியான நேரத்தில் உச்சத்தில் இருக்கிறோம், தொடர்ச்சியான மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றது எங்களுக்கு பெரிய கவுரவமாகும்” இன்று ரோகித் சர்மா பேசியிருக்கிறார்.

- Advertisement -