இன்னும் 2 மேட்ச் தொடர்ந்து தோற்றால்.. தயங்காம இந்த வேலையை சிஎஸ்கே கட்டாயம் செய்யும் – எம்எஸ் தோனி பேட்டி

0
807

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய தோல்வி சந்தித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே மோசமான தோல்வி

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவிக்க, சிஎஸ்கே இன்னிங்ஸ் தொடங்கி முதலில் விளையாடியது. ரச்சின் ரவீந்திரா 5 ரன்னில் வெளியேற, 17 வயது வீரர் ஆயுஷ்மாத்ரே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 32 ரன்கள் குவித்து வெளியேறிய நிலையில் சிவம் தூபே மற்றும் ஜடேஜா ஆகியோர் அரை சதம் அடித்தனர். சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மீண்டும் பேட்டிங் பார்முக்கு திரும்பினார். 45 பந்துகளை எதிர் கொண்ட அவர் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 76 ரன்கள், சூரியகுமார் யாதவ் 30 பந்துகளில் 68 ரன்கள் குவிக்க மும்பை அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்தது. இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து பேசிய தோனி சென்னை மீண்டும் 2 போட்டிகளில் தோல்வி அடைந்தால், அடுத்த ஆண்டுக்கான பிளேயிங் லெவனை அமைப்பதில் சிஎஸ்கே நிர்வாகம் இப்போது இருந்து ஆரம்பிக்கும் என்று சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அடுத்தகட்ட திட்டமிடல் அவசியம்

இதுகுறித்து அவர் கூறும் போது “நாங்கள் இந்த ஆட்டத்தில் மிகவும் மோசமாக இருந்தோம் என்று தெரியும். பனியின் தாக்கம் இருக்கப் போகிறது என்று தெரியும், பும்ரா உலகின் சிறந்த டெத் பவுலர் என்று தெரியும், மும்பை அணி தங்களது டெத் பௌலிங்கை முன்னரே ஆரம்பித்தது என்று தெரியும். இவ்வளவு விஷயங்கள் மும்பை அணி செய்ய தொடங்கிய போது நாங்கள் எங்களது அட்டாக்கிங் கிரிக்கெட்டை முன்னரே விளையாட தொடங்கி இருக்க வேண்டும். எங்களுக்கு இன்னும் ரன்கள் தேவைப்பட்டு இருக்கிறது. பனிப்பொழிவு இருக்கும்போது 175 ரன்கள் சமமான ஸ்கோர் கிடையாது.

இதையும் படிங்க:ஒரே போட்டியில் தோனியா இத்தனை தவறுகள் செய்தது.. பட்டியலை பார்த்து மிரளும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் வெற்றி பெறுவோம். இல்லை என்றால் உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும். 2020 ஆம் ஆண்டு இதேபோல்தான் எங்களுக்கு நிகழ்ந்தது. ஆனால் நாம் சரியான வடிவத்தில் விளையாடுகிறோமா, முழுமையான கிரிக்கெட்டை வெளிப்படுத்துகிறோமா என்பதை பார்க்க வேண்டும். நாங்கள் இன்னும் சில ஆட்டங்களில் தோல்வி அடைந்தால் அடுத்த ஆண்டுக்கான சரியான அணியை பெறுவது முக்கியம். எனவே இந்த தொடரிலேயே அடுத்த ஆண்டுக்கான சரியான பிளேயிங் லெவனை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுவோம்” என்று தோனி பேசியிருக்கிறார்.

- Advertisement -