கேஎல் ராகுலா? ரிஷப் பண்டா? என் சாய்ஸ் இப்போ இவர்தான்.. டீமுக்காக எல்லாமே செய்றாரு – ரோஹித் சர்மா பேட்டி

0
1127

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நாக்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கிறார்கள்.

இந்த இருவரில் நாளை யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நாளை இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. ஏற்கனவே சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் ஒரு நாள் தொடருக்கு விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ள நிலையில் வலுவான அணியை கட்டமைக்கும் விதமாக அணித்தேர்வு நடைபெற்று உள்ளது.

ரிஷப் பண்ட் கார் விபத்தின் காரணமாக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையை தவறவிட்டார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டு 10 இன்னிங்ஸ்களில் 452 ரன்கள் விளையாடியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட விதம் குறித்து கேஎல் ராகுல் நாளை ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இதில் முக்கிய விஷயத்தை பார்த்தால் கே எல் ராகுல் பல வருடங்களாக இந்திய அணிக்கு விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டும் இருக்கிறார். கடந்த 10 அல்லது 15 ஒரு நாள் போட்டிகளை எடுத்துப் பார்த்தால் அணி அவரிடம் என்ன கேட்கிறதோ அதை அவர் சரியாக செய்திருக்கிறார்.

இதையும் படிங்க:நான் எப்பவுமே.. இந்த விஷயத்தை எனக்காக செய்ய மாட்டேன்.. டீம்தான் முக்கியம் – ஹர்திக் பாண்டியா பேட்டி

மேலும் ரிஷப் பண்ட் தற்போது இந்திய அணியில் நலமாக இருக்கிறார். அவரும் எப்படிப்பட்ட வீரர் என்று நன்றாகவே தெரியும். இவர்கள் இருவருமே ஆட்டங்களை தாங்களாக வென்று கொடுப்பதில் சிறந்தவர்கள். இரண்டு சிறந்த வீரர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு நல்ல தலைவலி. ஆனால் கடந்த காலத்தில் நாங்கள் என்ன செய்தோம் என்பதை பார்க்கும் போது தொடர்ச்சியாக என்ன செய்துள்ளோமோ அதையே இப்போதும் செய்யப் போகிறோம். ஒரு அணியாக நாங்கள் நிற்கும் இடம் அதுதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -