இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா தற்போது நடைபெற்ற முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருவதால் இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் விளையாடும் விதம் குறித்து பாண்டியா சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்
ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை குறித்த சில சிக்கல்களால் தற்போது இந்திய அணியில் ஆல் ரவுண்டர் வீரராக வலம் வருகிறார். எப்போதெல்லாம் இந்திய அணி சிக்கலில் இருக்கிறதோ அப்போதெல்லாம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுக் கொடுப்பதில் மகத்தான வீரர்.
மேலும் தன்னை ஒரு சிறந்த கேப்டனாகவும் உலகிற்கு நிரூபித்து இருக்கிறார். ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு ஒரு முறை கோப்பையை வெல்லவும் அடுத்த முறை இறுதிப்போட்டிக்கும் வந்து தனது சிறந்த கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அழுத்தமான சூழ்நிலைகளில் தான் விளையாடும் விதம் குறித்து ஹர்திக் பாண்டியா சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
எப்போதுமே எனக்காக இதை செய்வதில்லை
இதுகுறித்து பாண்டியா விரிவாக கூறும்போது ” சூழ்நிலையைப் பொறுத்தவரை யார் அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறார்கள் என்பது தான் மிகவும் முக்கியம். நான் ஹர்திக் பாண்டியாவுக்காக எப்போதுமே விளையாடுவதில்லை இந்திய அணிக்காக மட்டுமே விளையாடுகிறேன். இந்திய நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே எப்போதும் எனது இலக்கு. இரண்டு பந்துகள் மட்டும் விளையாடுவதா அல்லது 60 பந்துகள் விளையாடுவதா என்பதை விட ஆட்டத்தின் ஒவ்வொரு பந்தையும் எடுத்துக்கொண்டு வெற்றி பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது.
இதையும் படிங்க:பும்ரா காயத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி.. ஐபிஎல்ல அவருக்கு இதை செஞ்சே ஆகணும் – தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்
அழுத்தத்தின் கீழ் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம். நான் மைதானத்திற்குள் நுழைந்த போது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் கொண்டு வந்த உற்சாகம் மிகவும் அற்புதமானதாக இருந்தது. அதை எடுத்துக்கொள்ள ஒரு கணம் உள்வாங்க வேண்டி இருந்தது. நான் பல போட்டிகளில் விளையாடி இருந்தாலும் அது என்னை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் மாற்றி இருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்பது ஒரு படி எப்போதும் மேலே இருக்கும். களத்தில் எங்களுக்குள் பல போட்டிகள் இருந்தாலும் அதில் கடுமையான உணர்ச்சிகளும் இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.