இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தானும் விராட் கோலியும் சேர்ந்து உலகக் கோப்பைகளில் நிறைய வெற்றியையும் தோல்வியையும் பார்த்து விட்டதாக கூறியிருக்கிறார்.
தற்போது உலக கிரிக்கெட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் முக்கியமானவர்களாக ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இருக்கிறார்கள். மேலும் இந்திய ஒருநாள் அணியில் இருவருமே தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். மேலும் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்புகிறார்கள்.
ரோகித் சர்மாவும் விராட் கோலியின் கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளியில் இந்திய அணிக்குள் வந்து விட்டார்கள். அப்போது இருந்து இருவரும் இந்திய அணியில் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். பிறகு இருவருமே தனித்தனியாக இளம் வீரர்களுடன் அனுபவத்தை பகிர்ந்து வந்தார்கள். தற்போது இருவரும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் மீண்டும் அதே நட்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் தற்போது ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ரோகித் சர்மாவும் இரண்டாவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார்கள். இருவருக்கு நடுவிலும் 8 புள்ளிகள் மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது. மேலும் பேட்டிங் செயல்பாடு ஆரம்ப காலகட்டத்தில் பார்த்தது போல மிகவும் அதிரடியாக மாற ஆரம்பித்திருக்கிறது.
இது குறித்து ரோகித் சர்மா பேசும்பொழுது ” உலகக் கோப்பை தொடர்களில் அணியை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்லும் பொறுப்பு எங்கள் இருவர் தோள்களிலும் அதிகமாக இருந்தது. இதனால் மற்ற வீரர்களுக்கு ஆர்வமோ பசியோ இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. அந்த வார்த்தையை நான் சொல்ல விரும்பவில்லை. அணியில் நாங்கள் மூத்த வீரர்களாக அனுபவம் கொண்டவர்களாக இருந்ததால் இயல்பாக அந்த பொறுப்பு எங்களுக்கு வந்தது”
இதையும் படிங்க : விராட் பாய்தான் என்னை இதை செய்ய சொன்னாரு.. ரோஹித் ரிஸ்க் எடுத்ததே எனக்காகதான் – ஜெய்ஸ்வால் ஓபன் டாக்
“விராட் கோலி இந்திய அணியில் இணைந்த பொழுது என்னுடைய கரியரை ஆரம்பித்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. அதற்குப் பிறகு நாங்கள் பல வருடங்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடி வந்திருக்கிறோம். உலகக்கோப்பையில் கிடைத்த பல வெற்றிகள் மற்றும் தோல்விகளை நாங்கள் இருவரும் சேர்ந்து எதிர் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.