பல வருஷம் ஆச்சு.. இப்பதான் ரியல் பாகிஸ்தானி பிளேயர பார்க்கிறேன்.. பாபர் அசாமையே மிஞ்சுவார் – அஸ்வின் புகழாரம்

0
2481

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் தற்போது நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

31 வயது பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முகமது ரிஸ்வான் தலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. தென்னாபிரிக்க மண்ணில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஒரு நாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் ஒரு நாள் தொடர் என சிறப்பான வெற்றிகளை பதிவு செய்து மீண்டும் பழைய பாகிஸ்தான் அணியை நினைவுபடுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் விளையாடி வரும் சல்மான் அலி ஆகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரில் சதம் அடித்து தனது சிறந்த பேட்டிங் திறமையை நிரூபித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் 33 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5 அரை சதங்கள் உதவியோடு இதுவரை 915 ரன்கள் குவித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், பல வருடங்களுக்குப் பிறகு ஒரு உண்மையான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை பார்ப்பதாக புகழாரம் சூட்டியிருக்கிறார்.

- Advertisement -

சிறந்த முன்னோடியாக மாறுவார்

இது குறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது “இரண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் குறித்து நான் உற்சாகமாக இருக்கிறேன். அது தயப் தாகிர் மற்றும் சல்மான் அலி ஆகா ஆகியோர் ஆகும். சல்மான் ஆகா எவ்வளவு நல்ல வீரராக இருக்கிறார். அவருக்கு தரம் மற்றும் பத்திரிகைகளை கையாளும் திறமை ஆகியவை நன்றாகவே உள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக களத்தில் இருக்கும் ஒரு பாகிஸ்தான் வீரரை நான் பார்க்கிறேன்.

இதையும் படிங்க:ஃபார்ம் வரும் போகும்.. ஆனா விராட் கோலியின் இந்த விஷயத்தை கவனிச்சா அவரோட தரம் தெரியும் – யுவராஜ் சிங்

மற்ற வீரர்களைக் காட்டிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னோடியாக மாறக்கூடும் என்கிற நம்பிக்கை உள்ளது. பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரை மிஞ்சும் அளவுக்கு அவருக்கு திறமை இருப்பதாக நான் உணர்கிறேன். எதிர்காலத்தில் பாகிஸ்தான் அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக அவர் மாறுவார்” என்ற ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம் சூட்டி பேசியிருக்கிறார்.

- Advertisement -