உலக கோப்பையை ஜெயிப்பது யார்.?.. ரோகித் சர்மாவின் எதிர்பாராத பதில்.. கலக்கத்தில் ரசிகர்கள்.!

0
3064

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்த வருடம் இந்தியாவில் வைத்து இன்று தொடங்க இருக்கிறது. மொத்தம் 46 நாட்கள் நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கு பெற்று விளையாட இருக்கின்றன. இந்த உலகக் கோப்பையில் பங்குபெறும் அணிகள் அனைத்தும் இந்தியா வந்துள்ள நிலையில் பயிற்சி ஆட்டங்களுக்குப் பிறகு மெயின் லீக் ஆட்டங்கள் இன்று முதல் நடைபெற இருக்கிறது.

இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்தப் போட்டி வருகின்ற எட்டாம் தேதி சென்னையில் வைத்து நடைபெற உள்ளது.

- Advertisement -

சொந்த நாட்டில் உலகக்கோப்பை நடைபெறுவதால் இந்திய அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றும் என்று கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மிகத் தீவிரமாக நம்பி வருகின்றனர். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டிகளையும் இந்திய அணி வென்று இருப்பதால் அவர்களின் இந்த நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. இதனால் இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை காண்பதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர்

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா உலக கோப்பையை யார் வெல்வார்கள் என்று எப்படி தெரியும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இது தொடர்பாக பேசியிருக்கும் ரோகித் சர்மா” உலக கோப்பையை யார் வெல்வார்கள்? இந்த கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை. உலக கோப்பையை யார் வெல்வார்கள் என்று நான் எப்படி இப்போதே சொல்ல முடியும்? நான் சொல்வதெல்லாம் ஒரே விஷயம் தான். இந்திய அணி நன்றாக இருக்கிறது. வீரர்கள் அனைவரும் நல்ல உத்வேகத்துடன் நேர்மறையான மனநிலையில் உள்ளனர். ஒவ்வொரு வீரரும் நல்ல உடல் தகுதியுடனும் நலமாகவும் இருக்கின்றனர். இதைத்தான் என்னால் இப்போது கூற முடியும். இதற்கு மேல் எதுவும் பேச முடியாது” என தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய ரோஹித்” ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைந்தால் நன்றாக இருக்கும். இது வீரர்களுக்கு ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற விஷயங்களை நாம் எதுவும் செய்ய முடியாது. அது ரசிகர்களின் விருப்பம். விமான நிலையங்கள் மற்றும் ஹோட்டல்கள் என எங்கு சென்றாலும் உலக கோப்பையை ஜெயித்து விடுங்கள் சார், என்பதுதான் ரசிகர்களின் பேச்சாக இருக்கிறது” எனவும் தெரிவித்தார்.

- Advertisement -

“ஒவ்வொரு வருடமும் ஐசிசி கோப்பை காண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒரு அணியாக அந்த போட்டிகளில் வெற்றி பெற தவறும் பட்சத்தில் மக்கள் அதனை ஒரு மிகப்பெரிய தோல்வியாக எடுத்துக் கொள்கின்றனர். நாம் அதற்கு முன்பு வரை என்ன சாதித்தோம் என்பதையும் மறந்து விடுகின்றனர். இந்திய அணியாக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாகவும் இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் அணிகளில் முதன்மையான ஒரு அணி. எனவே நிச்சயமாக ஐசிசி டிராபியை வெல்ல வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். நாம் கோப்பையை வெல்வதற்கு எல்லா வகையிலும் தயாராக இருக்க வேண்டும்” என தெரிவித்திருக்கிறார் ரோஹித் சர்மா.

இந்திய அணி கடைசியாக 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்று 28 வருடங்களுக்குப் பிறகு சாதனை புரிந்திருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அரை இறுதியில் முறையே ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியை தழுவியது. தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் வைத்து நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. அதனை இந்திய கிரிக்கெட் அணி நிறைவேற்றும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.