இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் தற்போது இரண்டு அணி வீரர்களும் மிக தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக திகழும் ரோஹித் சர்மாவுக்கு இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடிக்க ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது.
இந்திய அணி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளது. இதற்கு முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் டி20 தொடரில் வெற்றியும், ஒரு நாள் தொடரில் தோல்வியும் அடைந்த பின்னர் சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறுவது அவசியமாக இருப்பதால் தனது முழு திறனையும் இந்த தொடரில் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வங்கதேச அணியும் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்ற கையோடு மிகுந்த நம்பிக்கையோடு இந்திய அணிக்கு எதிரான தொடரையும் எதிர்கொள்ளும்.
இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4137 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சிக்ஸர்களில் 84 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இந்த சூழ்நிலையில் இன்னும் 8 சிக்ஸர்களை அடித்தால் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடிக்க ஒரு சிறந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8503 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 91 சிக்சர்கள் அடங்கி இருக்கின்றன.
எனவே தற்போது 37 வயதாகி வரும் ரோஹித் சர்மா இந்த 8 சிக்ஸர்களை அடிப்பதன் மூலமாக சேவாக்கை முந்தி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். ரோகித் சர்மாவுக்கு அடுத்ததாக மகேந்திர சிங் தோனி 78 சிக்சர்களும், சச்சின் டெண்டுல்கர் 68 சிக்சர்களும், ரவீந்திர ஜடேஜா 64 சிக்சர்களும் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உண்மைய சொன்னா ரோகித்கிட்ட நல்ல டெக்னிக் கிடையாது.. அந்த விஷயம் அபத்தமானது – ஜான்டி ரோட்ஸ் பேட்டி
இந்த சாதனையை முறியடிப்பதன் மூலம் இந்திய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதல்வீரராக இடம் பெறுவார். மேலும் 2014ஆம் ஆண்டு நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் ஒரு காலண்டர் ஆண்டில் 33 சிக்ஸர்கள் அடித்து முன்னணி வீரராக வகிக்கும் நிலையில், தற்போது அந்த சாதனையை முறியடிக்க தற்போது 26 சிக்சர்கள் அடித்திருக்கும் ஜெய்ஸ்வாலுக்கு வங்கதேச தொடர் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.