3வது டி20 போட்டியில் வெற்றி பெற்று ரிக்கி பாண்டிங்கின் தனித்துவமான சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா ?

0
138
Ricky Ponting and Rohit Sharma

இந்தியாவில் கேப்டன்களாக கபில்தேவ், சவுரவ் கங்குலி, மகேந்திர சிங தோனி ஆகியோர்கள் மிக முக்கியமானவர்களாக, நாம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். மகேந்திர சிங் தோனி எந்த இந்திய கேப்டன்களும் செய்யாத முறையில், ஆஸ்திரேலிய பாணியில், தான் கேப்டனாக இருக்கும் பொழுதே, துணை கேப்டனாக விராட் கோலியைக் கொண்டுவந்து, எதிர்கால கேப்டனாக நிறுத்தி, எந்தவித சலசலப்புகளும் இல்லாமல் அமைதியாக, அழகாக கேப்டன் பதவியை விராட்கோலிக்கு கைமாற்றி விட்டு, அவருடைய கேப்டன்சியின் கீழும் சில ஆண்டுகள் விளையாடினார்.

மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்த பொழுதே, எதிர்கால கேப்டனாக விராட்கோலி உருவாக்கப்பட்டதாலும், விராட்கோலி மிகப்பெரிய தரத்தில் விளையாடி வந்ததாலும், எந்தவித போட்டியும் இல்லாமல் கேப்டனாக பதவி ஏற்றார்.

- Advertisement -

இதனால் ஒரு கேப்டனாவதற்கான எல்லாத் தகுதிகளையும் கொண்ட சிறந்த வீரரான ரோகித் சர்மாவிற்கு கேப்டன் பதவி கிட்டவில்லை. படிப்படியாக அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்ற அளவிற்கு உயர்ந்ததோடு, டெஸ்ட் போட்டியில் சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்து, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கான துணை கேப்டனாக உயர்ந்தார்.

இதற்கு நடுவில் ஐ.பி.எல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலிருந்து மும்பை அணிக்கு வாங்கப்பட்ட ரோகித் சர்மா அங்கு கேப்டனாக உயர்ந்தார். அதற்கு முன்பு கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங்கே ரோகித் சர்மாவின் கேப்டன்சி திறமையைப் பெருமையாகப் பேசுமளவிற்கு சிறப்பாகச் செயல்பட்டார். அவரது தலைமையின் கீழ் மும்பை அணி அதிகமுறை கோப்பையை வென்ற அணியாகவும், நம்பர் 1 அணியாகவும் உயர்ந்து நிற்கிறது!

சில காரணங்களால் மூன்று வடிவ கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி விலக, ரோகித் சர்மா இந்திய அணியின் ஒரே கேப்டனாக உயர்ந்தார். அவர் இந்த ஆண்டு கேப்டனாக வந்ததில் இருந்து, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து தொடர் என மொத்தம் 19 வெற்றிகளைப் பெற்று இருக்கிறார்கள். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் தலைமையில் தொடர்ந்து 20 முறை வென்றதே சாதனையாக இருக்கிறது. ரிக்கி பாண்டிங் 16 முறை தொடர்ந்து வென்றும் ஒரு சாதனையை வைத்திருந்தார். அதை ரோகித் சர்மா உடைத்திருந்தார்.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து அணியுடனான மூன்று டி20 போட்டிகளில் இரண்டை வென்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றி இருக்கிறது. தொடரின் கடைசிப் போட்டி இன்று நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றால், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்வார். சமன் செய்வாரா என்று பார்ப்போம்!