இன்னும் 2 ரன்.. டிராவிட் ரெக்கார்டை உடைக்கும் ரோஹித்.. தோனி சாதனையும் முடிவுக்கு வரும்

0
452
Rohit

இந்திய அணி இன்று இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் இரண்டு ரன்கள் எடுக்கும் பொழுது இந்திய அணிக்காக ராகுல் டிராவிட் செய்திருந்த மிகப்பெரிய சாதனையை கேப்டன் ரோஹித் சர்மா கடந்த செல்வார்.

இந்த தொடரின் முதல் போட்டி இந்திய பேட்ஸ்மேன்கள் சரிவர விளையாடாத காரணத்தினால் டை ஆனது. எனவே தொடரை வெல்ல வேண்டும் என்றால் அடுத்து நடைபெற இருக்கின்ற இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்கின்ற நெருக்கடியில் இந்திய அணி இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்திய அணிக்கு இலங்கை அணி அதிர்ச்சி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பந்து கொஞ்சம் நின்றும் திரும்பியும் வருகின்ற ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி இடம் இழந்ததில்லை என்கின்ற பெருமைடன் இருந்து வருகிறது. இதை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா அதிரடியாக 47 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். அவரைத் தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் சொல்லிக் கொள்ளும்படி சரளமாக விளையாட முடியவில்லை. இந்த நிலையில் முதல் போட்டியில் ராகுல் டிராவிட் செய்த ஒரு சாதனையை ரோகித் சர்மாவால் கடக்க முடியவில்லை.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டு ராகுல் டிராவிட் ரோஹித் சர்மாவுக்கு முன்னால் இருக்கிறார். இன்னும் இரண்டு ரன்கள் எடுப்பதன் மூலமாக அவரை ரோகித் சர்மா வந்து செல்வார். மேலும் இந்திய அணிக்காகவும், ஐசிசி நடத்திய ஆசிய லெவன் அணியிலும் இடம் பெற்று விளையாடியதில் ஒருநாள் கிரிக்கெட்டில் தோனி தற்பொழுது ரோகித் சர்மாவுக்கு முன்னால் இருக்கிறார். தோனியை ரோகித் சர்மா தாண்டி செல்ல இன்னும் 7 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்திய அணிக்காக மட்டும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள்:

சச்சின் டெண்டுல்கர் – 18,426
விராட் கோலி – 13,872
சவுரவ் கங்குலி – 11,221
ராகுல் டிராவிட் – 10,768
ரோஹித் சர்மா – 10,767

இதையும் படிங்க :பிறந்தது அங்க தான்.. ஆனா பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் இதனால ஆடவே மாட்டேன்.. ஜிம்பாப்வே சிக்கந்தர் ராசா பேட்டி

இந்திய அணி மற்றும் ஐசிசி அணிகளில் இடம் பிடித்து ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல் :

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 18,426.
குமார் சங்கக்கார (இலங்கை, ஐசிசி, ஆசியா) – 14,234.
விராட் கோலி (இந்தியா) – 13,872.
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா, ஐசிசி) 13,704.
சனத் ஜெயசூர்யா (இலங்கை, ஆசியா) – 13,430.
மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை, ஆசியா) – 12,650.
இன்சமாம்-உல்-ஹக் (பாகிஸ்தான், ஆசியா) – 11,7
ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா, ஐசிசி, ஆப்பிரிக்கா) – 11,579.
சவுரவ் கங்குலி (இந்தியா, ஆசியா) 11,363.
ராகுல் டிராவிட் (இந்தியா, ஐசிசி, ஆசியா) 10,889.
எம்எஸ் தோனி (இந்தியா, ஆசியா) – 10,773.
ரோஹித் சர்மா (இந்தியா) – 10,767.

- Advertisement -